சந்தைக்கு வரவுள்ள புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள்

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் இன்று பிரதமரிடம் வழங்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் ஆகியோருக்கு இடையிலான இச்சந்திப்பு விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. Photo: Newswire.lk News: Thinakural

எதிர் கட்சியின் இனவாதப் போக்கு கவலையளிக்கிறது – மங்கள

தற்போதைய அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் என்பன நாட்டிற்கு ஒருபோதும் அவசியமானவை அல்ல. அவ்வாறிருக்க முன்னர் எதிர்க்கட்சியிலிருந்த பொதுஜன பெரமுனவை போன்று தற்போதைய எதிர்க்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுவது கவலையளிக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விசனம் வெளியிட்டிருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா கடந்த புதன்கிழமை அணிந்துவந்த ஆடை பாராளுமன்றத்திற்குள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. அதாவுல்லா ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வதைப்போன்ற ஆடையில்

இலங்கைக்கான நஷ்ட ஈட்டை வழங்க MT New Diamonds கப்பல் உரிமையாளர்கள் இணக்கம்

தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு 340மில்லியன் ரூபா நட்ட ஈட்டை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை கப்பலின் உரிமையாளர்களினால் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, கடற்படை, வான்படை உள்ளிட்ட அனைத்து பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு,

பாரிய பாறாங்கல் வீழ்வு; ஹட்டன் – கொழும்பு வீதி போக்குவரத்து முடக்கம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பாரிய பாறாங்கல் புரண்டு வீதியின் குறுக்கே வீழ்ந்ததன் காரணமாக அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ரம்பாதெனிய விகாரைக்கு அருகில் இன்று (24) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாறாங்கல் புரண்டு வீழ்ந்ததன் காரணமாக பயணிகள், பாடசாலை மாணவர்கள், அரச பணியாளர்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். வீதியில் வீழ்ந்த பாறாங்கல்லை அகற்றும் நடவடிக்கையில்

20வது திருத்தம் ஓர் பார்வை பாகம்-3

வை எல் எஸ் ஹமீட் பாராளுமன்றப் பேரவை ( Parliamentary Council) 17வது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புப் பேரவை 18வது திருத்தத்தினால் இல்லாமலாக்கப்பட்டு பாராளுமன்றப் பேரவை கொண்டுவரப்பட்டது. அதை இல்லாதொழித்து 19வது திருத்தத்தினால் மீண்டும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சபையை 20 வது திருத்தத்தின் மூலம் இல்லாமலாக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றப்பேரவை கொண்டுவரப் பிரேரிக்கப்பட்டிருக்கின்றது; என முன்னைய பாகத்தில் தெரிவித்திருந்தோம். Composition (அங்கத்துவம்) இரண்டு முறையும் பாராளுமன்றப் பேரவையின் அங்கத்துவம் ஒரேவிதமானதே!

ஈஸ்டர் தாக்குதல் முதல் இன்றுவரை அச்சத்தில் வாழும் அட்டுளுகம

எம் கே யெம் அஸ்வர் அண்மையில் பண்டாரகமை அட்டுளுகமையில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடொன்று திடீரென சுற்றிவளைக்கப்பட்ட  விவகாரம் தேசிய ரீதியில் பேசுபொருளானதையும் சிங்கள ஊடகங்கள் இச் சம்பவத்திற்கு அதிக இடம் கொடுத்திருந்ததையும் அறிந்திருப்பீர்கள். “கொவிட் 19 காலத்தில் முடக்கப்பட்ட கிராமங்களில் பிரபல்யம் அடைந்த பண்டாரகமை, அட்டுளுகம கிராமத்தில் அண்மையில் பொது மக்கள் சுற்றி வளைத்து தாக்கியதில் படுகாயத்திற்குள்ளான பொலிசார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்ற செய்தி காட்டுத் தீ

கிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்

  செவ்வாய், வியாழக்கிழமைகளில் மு.ப. 8.30 – பி.ப. 4.15 வரையும், சனிக்கிழமைகளில் மு.ப. 8.30 – 12.30 மணி வரையும் பொதுமக்கள் சேவை தின நேரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த நேரத்தில் கிராம சேவகர்கள் தங்களது அலுவலகங்களில் கடமையில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது கிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அமைச்சரவையினால் புதன்கிழமைக்கு பதிலாக, திங்கட்கிழமையை பொதுமக்கள் தினமாக அறிவிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை அடுத்து,

உயர் கல்வித்துறையை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் – கோத்தாபய

பல்கலைக்கழகங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் மற்றும் கலைத்திட்டங்களை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளின் கேள்விக்கு ஏற்ற வகையில் சர்வதேச தரம் வாய்ந்த வினைத்திறன்மிக்க தொழிநுட்ப வல்லுனர்களை உருவாக்குவது முக்கிய தேவையாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சாதாரண தரம் அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த, சித்தியடையாத அனைவருக்கும் தொழிநுட்பம் மற்றும் தொழிற்

20வது சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 20வது திருத்தத்தை வாக்கெடுப்பில்லால் நிறைவேற்ற முடியாதென்று சவால் விடுத்து சிறப்பு விண்ணப்பம் ஒன்றை நேற்று அவர் தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வார காலத்தினுள் அதற்கு எதிராக யாரேனும் உயர்நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்குள், அந்தத் திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க

அமைச்சரவை முடிவுகள் – 2020.09.21

2020.09.21 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் ஒரே பார்வையில் குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு – 2021 வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவையின் உப குழுவின் கூட்டம் காணி அடிப்படை வசதிகள் மற்றும் காணி தகவல் சேவை கட்டமைப்பை நிறுவுதல் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டம் ஆபாச வெளியீடுகளை தடை செய்யும்