குடும்ப ஆட்சி நாட்டிற்கு புற்றுநோய். ஆனால் அந்த புற்றுநோய் உருவாக அனுமதிப்பதும் மக்களேதான் – ரெஹான் ஜயவிக்ரம

முன்னாள் வெலிகம நகரசபைத் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம அவர்கள் SLVLOG சேவைக்கு வழங்கிய நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு

ரெஹான் இந்நாட்களில் என்ன செய்கிறீர்? முகநூல் நேரலைகளில் வந்து விமர்சனங்களை முன்வைக்கின்றீர்? உண்மையில் என்ன நடந்தது?

நான் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக வெலிகம நகரசபை உறுப்பினராக கடமையாற்றினேன். அரசாங்கத்தின் மூலம் ஐனநாயக விரோத செயற்பாடுகள் நடைபெறும்போது, அது பற்றி கவனம் செலுத்தாமல் ஐக்கிய தேசியக் கட்சியினர் எம்மை பதவியிலிருந்து நீக்கினார்கள்

உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் முண்ணனி என்று அவதானிக்கும்போது ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளோர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாகும். எமது வாக்காளர்களும் அந்தப் பிரிவில்தான் உள்ளனர்.

இவ்வாறு பதவி நீக்கிய போது ரணில் விக்ரமசிங்க பற்றி கடுமமையான கோப உணர்வு ஏற்பட்டது. இதனால் முகநூலில் எனது நடத்தைகளுக்கு அப்பால் சென்று விமர்சித்தேன். ஆனால் நான் அவ்வாறு செய்தது தவறு என்று உணர்கிறேன். ஏனெனில் மக்கள் ஒதுக்கப்பட்ட கட்சி பற்றி விமர்சனம் செய்து பயனில்லை.

ஆனால் அதற்காக நான் பேசியது தவறு என்று மன்னிப்புக் கேட்கவில்லை. அதாவது நான் பேசிய விதத்தை மாற்றி இருக்க வேண்டும். நான் அன்று பேசிய விதம் தவறு நான் இளைஞர்களுக்கு கூற விரும்புவது அவ்வாறு செயற்பட வேண்டாம். நிதானமாக செயற்படுங்கள்

நீங்கள் அந்த உரையில் முடியுமென்றால் வெலிகமையால் ஒரு கூட்டத்தை வைத்து பார்க்கவும் என்று சவால் விடுகின்றீர். ஏன் வெலிகமையில் கூட்டம் வைப்பது என்றால் உங்களிடம் அனுமதி கேட்க வேண்டுமா? இதுவா உங்களுடைய ஜனநாயகவாதம்?

நான் நினைக்கிறேன் நான் பேசிய விதம் தவறு. வெலிகமையில் நடைபெறும் கூட்டங்களை தடை செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை. ஆனால் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டங்களை தடை செய்வேன் என்ற கருத்தில் கூறவில்லை மாறாக ஐம்பது பேரையாவது ஐக்கிய தேசிக்கட்சியின் கூட்டங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவினால் ஒன்றிணைக்க முடியாது என்ற கருத்தில்தான் கூறினேன்.

நீங்கள் இளம் அரசியல்வாதி. அடுத்தாக தலைவராக வரும் தலைவரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் குணங்கள் என்ன?

தனியாக தீர்மானம் எடுக்காமல் கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து பொதுவான தீர்மானம் எடுக்க வேண்டும். மக்கள் மீது ஆதரவு இருக்க வேண்டும். ஹிட்லர் ஆட்சி இருக்கக் கூடாது.

69 இலட்சம் பேர் கோட்டாபயவுக்கு வாக்களித்தது பொலிஸ் அடக்குமுறைகளுக்கு அல்ல, ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அடக்குவதற்கும், தமக்கு ஏற்ற விதத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்டுத்துவதற்கும் அல்ல.

எமக்கு தேவையான அனைத்து பாடங்களையும் இந்த அரசாங்கத்தின் மூலமே பெறமுடியும்.

நீங்கள் கூறுகின்ற குணநலப்பண்புகளை உங்கள் தலைவரிடம் நீங்கள் அவதானிக்கிறீர்களா?

நான்தான் சஜித் பிரேமதாஸவிற்காக முதன் முதலாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வௌியேறினேன். முதலாவதாக எனது கட்சி உறுப்புரிமைதான் நீக்கப்பட்டது. மேலும் என்னிடம் இது தொடர்பான விசாரணை நடாத்தினார்கள்.

ஆனால் அனைத்து தலைவர்களும் பரிபூரணமானவர்கள் அல்ல. அவரிடமும் சில குறைபாடுகள் உள்ளதாக சமூக மட்டத்தில் கூறப்பட்டுள்ளது. என்றாலும் அவரிடம் ஒரு குணம் உள்ளது. தன்னிடம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு முன்னோக்கி செல்பவர்.

அவர் யாலைக்கு செல்வதாக அனைவரும் கூறுகின்றார்கள். ஆனால் மனிதர்களை கொலை செய்வதைவிட அது நல்லம். இந்தக் கட்சி உருவாக்கி தற்போது ஒன்னறை ஆண்டுகளாகிறது. எனவே கட்சிகளை ஆரம்பிக்கும்போது பாரிய சவால்கள் ஏற்படுகின்றது. அதற்காக இந்தப பயணத்ததை கைவிடுவது நல்லதல்ல.

மேலும் தலைவரின் குணப்பண்புகளுடன் அவரைச் சுற்றி உள்ளவர்களின் குணநலன்களும் மக்களால் அவதானிக்கப்படுகின்றது. மேலும் சஐித் பிரேமதாஸவைச் சுற்றி அவருக்கு சிறந்த வழிகாட்ட இளம் தலைமுறை உள்ளனர் என்பது எனது நம்பிக்கையாகும்.

உங்களுடைய அரசியல் பயணத்திற்கு மங்கள சமரவீரவின் ஆசிர்வாதம் உள்ளதா?

உண்மையில் மங்கள சமரவீரதான் எனது அரசியல் வாழ்வின் ஆரம்ப வழிகாட்டி, அவர் எதிர்கட்சியில் இருந்தாலும் விமர்சிக்க மாட்டேன் தாராளவாத சிந்தனைப் போக்குடையவர் 1994 முதல் அமைச்சராக கடமையாற்றியுள்ளளார். அவரையும் இணைத்துக் கொண்டு எமது அரசியலை முன்னோக்கி செல்லலாம் என நினைக்கிறேன். ஆனால் அவர் வேறு தீர்மானங்கள் எடுத்தால் உதவா முடியுமா என்பது சந்தேகம்.

பாட்டாலி சம்பிக்க பற்றி உமது மனநிலை எவ்வாறு உள்ளது?

கடினமான கேள்வி, பாட்டாலி சம்பிக்க ரணவகவும் அரசியலில் அதிக அனுபவம் உள்ள ஒருவர். அவர் பல ஜனாதிபதிகளுடன் பணியாற்றி தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக உள்ளார். எனது பார்வையில் அவருக்கும் கட்சிக்கும் இடையில் பிரச்சினைகள் இல்லை.

உங்களுக்கும் ரோஹிதா ராஜபக்ஷவிற்கும் சிறந்த நட்புறவு உள்ளது. அவரது பிறந்தநாளைக்கும் வாழ்த்துத் தெரிவித்திருந்தீர். அவரைச் சந்தித்தால் அரசியல் பற்றி பேசுவதில்லையா?

நான் ரோஹிதாவின் நண்பராக முன்னர், நாமலின் நண்பன், இருவரும் பாடசாலைக்கால நண்பர்கள், ஆனால் நண்பர்கள் என்பதற்காக எமது அரசியல் போக்கு வேறுபட்டது. எனவே நாம் சந்திக்கும்போது அரசியல் பேசுவதில்லை. மேலும் எமது நட்பிற்கும் அரசியல் தேவையில்லை. அரசியலை விட நட்புறவு சிறந்தது.

தேர்தலின் போது அயலவர்கள் எதிர்கட்சி என்பதற்காக அவர்களுடன் நாம் கோபிப்போமா? இல்லை ஆனால் இலங்கையில் அரசியல் கலாசாரமாக உள்ளது. அரசியல்வாதிகளுக்கு நண்பர்களாக இருக்க முடியாது என்ற கருத்து உருவாகியுள்ளது. ஏனெனில் சில அரசியல்வாதிகள் தமது நட்பை வௌிப்படுத்துவதில்லை.

ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இதேமாதிரியான உறவுதானே உள்ளது?

ஆம் ஆனால் ரணில் விக்ரமசிங்க தமது நட்பை இரகசியமாக வைத்துள்ளார். ஆனால் நான் எனது நட்பை வௌிப்படுத்தியுள்ளேன். ஆனால் எனது நட்புறவை பயன்படுத்தி ராஜபக்ஷாக்களிடம் அரசியல் இலாபம் பெறவில்லை. அவ்வாறு பெற்றுள்ளதாக ஒப்புவித்தால் எனது அரசியல் பயணத்தை நிறுத்துவிடுவேன்.

இருவருக்கும் சிறந்த நட்புறவு உள்ளது. ஆனால் அதில் அரசியல் இல்லை.

ரோஹிதா ராஜபக்ஷவின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது உண்மையா. சிறந்த நண்பன் எனவே உங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதா? நீங்களும் கலந்து கொண்டீரா?

கொரோனா பரவல் காரணமாக ரோஹிதா ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருப்பது பொருத்தமில்லை என்று தனது நண்பன் ஒருவரின் வீட்டிற்கு வாடகைக்கு சென்றார். இது தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்னர் என்னிடமும் கூறினார்.

அந்த வீடு கோட்டையில் உள்ளது. அந்த வீட்டிற்கு அருகில்தான் நிஸ்ஸங்க சேனாதிபதியின் வீடு உள்ளது. ஆனால் ரோஹிதாவின் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகிறேன்.

ரோஹிதா என்பவர் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஒருவரல்ல, மதுபானம், சிகரெட் பாவனைகள் அவரிடம் இல்லை. அவருடைய பொழுது போக்கு பாடுவது, ராகர் விளையாடுவது போன்றவை மேலும் ரோஹிதாவின் நண்பர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.

நான் இவ்வாறு கொண்டாட்டம் இடம்பெற்றதா என்று தொலைபேசி மூலம் விசாரித்தேன் எனக்கும் தேவைப்பட்டது அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவதாகும். ஆனால் பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக செல்லவில்லை.

மேலும் குறித்த செய்தி வௌியாகுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் அலரி மாளிகைக்கு சென்று விட்டார். குறித்த வீடு அவருடைய வீடு அல்ல. அந்த வீட்டில் சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வசித்தார். ஆனால் தற்போது அவர் அலரிமாளிகையில் உள்ளார்.

நாடு என்ற அடிப்படையில் நாம் தவற விட்ட இடம் எது?

தனி நபர்களை வைத்து அரசியல் செய்ததுதான் நாம் தவறிய இடம். இந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும்வரை இந்த முறையில் மாற்றம் ஏற்படாது.

எமக்கு பல்கலைக்கழக பிரச்சினையுள்ளது, வைத்தியசாலைப் பிரச்சினை, இலவச மருந்து கொடுத்தாலும் சில இடங்களில் தாய் தன் பிள்ளைக்கு தாய்ப்பாலை கொடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

அவ்வாறே எமது கல்வித்திட்டத்தில் தவறுள்ளது. புலமைப்பரீட்சைக்கு கூறுவது பெற்றோரின் பரீட்சை என்று, மேலும் அத்திட்டத்தினால் பிள்ளைகள் மனரீதியாக பாதிப்படைகின்றனர்.

எமக்கு ஒரு தலைவர் அல்ல தேவை. தலைவர்களின் குழுவொன்று தேவைப்படுகிறது. அதாவது ஒரு பக்கத்தால் மறுபக்கத்தால் அல்ல அனைவரும் ஒன்றிணைந்து குழுவான பொதுத்தலைவர்களின் கொத்தொன்று தேவை.

மேலும் மக்களின் அணுகுமுறைகளில், கல்வித்திட்டத்தில் மாற்றமடைய வேண்டும்.

ஆனால் இதனை உயர் மட்டத்தில் தானே மாற்ற வேண்டும் ஏனெனில் அவர்கள் தானே மக்களுக்கு பணத்தையும் பொருளையும் கொடுத்து வாக்கு கேட்கிறார்கள்? எனவே உயர் மட்டத்தில் தானே மாற வேண்டும்?

உண்மைதான். அதனை மாற்ற அனைத்து கட்சிகளிலும் முறையான பெயர் பரிந்துரைக் குழு உருவாக்க வேண்டும். அரசாங்கத் தொழில் எடுப்பதற்கு தகைமைகள் பார்க்கப்படுகின்றது. ஆனால் பிரதேச சபை உறுப்பினராக மாறுவதற்கு கல்வித்தகைமை பார்ப்பதில்லை, பாராளுமன்றம் செல்ல கல்வித்தகைமை பார்ப்பதில்லை. எனவே இது அரசியல் ரீதியாக மாற வேண்டும்.

அவ்வாறே மக்களும் மாற்ற மடைய வேண்டும். அதாவது அனைவரும் ஒரே மாதிரி மாற வேண்டும். ஒரு பக்கத்திற்கு மாத்திரம் தவறைச் சுட்டிக்காட்டி பயனில்லை.

அனைவரும் சம்பிரதாயமாக வாக்களிக்கும் போக்கு காணப்பட்டது. ஆனால் எனக்கு பயமொன்றுள்ளது தற்போது போகிற போக்கில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அரசியல் கட்சி பலமில்லாத ஒருவரை மக்கள் நியமிப்பார்களா?

அவர்கள் அரசியல்வாதிகளை விட கீழ் மட்டமாக செயற்பட்டால் அடுத்தது என்ன செய்வது. மேலும் சம்பிரதாய தேர்தல் முறை வீசுபட்டுவிடும்.

நாட்டின் குடும்ப ஆட்சி பற்றி என்ன கூறுகிறீர்?

எனக்கும் இதே மாதிறி குற்றச்சாட்டு உள்ளது. அதாவது எனது அப்பா அரசியல் செய்தமையினால்தான் நானும் அரசியலில் களமிறங்கினேன் என்று.

எனது கருத்து இதுதான் அரசியல் செய்வதற்கு அவர் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவறாக இருப்பது தகைமையாக கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அது தகைமையற்றதும் அல்ல. அதனை நடுநிலையாக அவதானிக்க வேண்டும்.

குடுப்ப அரசியல் செய்பவர் கொலைகாரன் என்றால் அவரை பாராளுமன்றம் அனுப்புவது தவறு. ஆனால் குடும்பத்தில் இருந்து வருபவர் கொள்கைளுக்கு அமைய அரசியல் செய்தால் அவரை நியமிப்பது குறித்து சிந்திக்கலாம்.

நான் எனது அரசியலை ஆரம்பித்தேன் நகரசபையிலிருந்து, ஆனால் பொதுவாக அமைச்சர்களின் பிள்ளைகள் மாகாணசபை அல்லது பாராளுமன்றத்தில்தான் தனது அரசியலை ஆரம்பிக்கின்றனர்.

நான் நகரசபையில் ஆரம்பித்தேன் கீழ் மட்ட மக்களின் மனநிலையை உணர்ந்து கொள்வதற்காகும். எனக்கு யாரும் குற்றம்சாட்ட முடியாது. ஏனெனில் நான் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தேன்.

இதனை உமது தனிப்பட்ட கேள்வியாக நோக்க வேண்டாம்? தற்போது நாட்டில் குடும்ப ஆட்சி நடக்கிறது அதுதான் கேட்டேன்.

எனக்கு தேவைப்பட்டது. இது பற்றி நான் தெளிவுபடுத்த விடின் எனக்கும் இதே குற்றச்சாட்டை முன்வைப்பார்கள்

அப்படி குடும்ப ஆட்சி வந்தாலும் அவர்கள் நியமிப்பவர்கள் அரசியல்வாதிகளைத்தான். 2015 ஆம் ஆண்டு குடும்ப ஆட்சிக்கு எதிராக வாக்களித்தாலும், பின்னர் 69 இலட்சம் மக்கள் மீண்டும் குடும்ப ஆட்சிக்குத்தான் வாக்களித்தனர். அவர்கள் அனைவரும் அடிமட்ட மக்கள் அல்ல அறிஞர்களும் வாக்களித்தனர். அவர்கள் வாக்களித்தது ஏன்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷா தனது குடும்ப உறுப்பினர்களை பதவியில் அமர்த்த மாட்டார் என நாம் நினைத்தோம். ஆனால் அவரும் செய்தது 2015 இற்கு முன் இருந்ததைத்தான். ஆனால் அன்று அரசியல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதாக காட்டித்தான் வாக்கு கேட்டார்கள் ஆனால் அது நடக்கவில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

ஒரு பக்கம் நினைக்கிறேன் குடும்ப ஆட்சி நாட்டிற்கு புற்றுநோய். ஆனால் அந்த புற்றுநோய் உருவாக அனுமதிப்பதும் மக்களேதான். அப்படி என்றால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவது.

சஜித் பிரேமதாஸவும் அவருடைய தந்தையின் பெயரைக் காட்டித்தானே அரசியலில் நுழைந்தார்?

அவர் அரசியலில் இறங்கும்போது தந்தை இருக்கவில்லை. மேலும் அவருடைய தந்தையின் தேர்தல் தொகுதி மத்திய கொழும்பு. ஆனால் அவர் அரசியலில் இறங்கியது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், அதாவது ராஜபக்ஷாவின் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் தேர்தலில் களமிறங்கி ராஜபக்ஷாக்களை தோல்வியடையச் செய்தனர்.

அதாவது அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ என்பதற்காக அவரைக் குறை கூறவும் முடியாது. அதற்காக அவரைப் பெரிதுபடுத்தவும் முடியாது. ஆனால் சஜித் அரசியலில் இறங்கும்போது தந்தை உயிருடன் இருக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்தும் ஹம்பாந்தோட்டையில் முதலிடம் பெற்று வருகின்றார். அதாவது அதற்கு காரணம் மக்களுக்கு சேவை செய்துள்ளமையாகும்.

கோட்டாபய ராஜபக்ஷ குறித்து என்ன நினைக்கிறீர்?

யுத்தத்தை வெற்றி கொண்டமையினால் அவரைப்பற்றி நல்லெண்ணம் காணப்பட்டது. அவர் வெற்றி பெற்றால் மாற்றம் அடையும் என நினைத்தேன் ஆனால் அவருக்கு பழைய படி குடும்ப ஆட்சியை நடத்த வேண்டியுள்ளது. பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்களின் நடவடிக்கைகள் அவ்வாறு உள்ளது.

எண்ணெய் விலையேற்றம், பொருளாத நிலவரங்கள் பற்றிய அமைச்சர்களின் கருத்துக்கள் ஐனாதிபதிக்கு தாக்கம் செலுத்துகின்றது. ஆனால் மக்கள் வாக்களித்தது இந்த முறைமையை மாற்றுவதற்கு. அவர் மாற்றாவிடின் 2024 ஆகும்போது மக்கள் தீர்மானம் எடுப்பார்கள்.

தற்போது நடைபெற்ற விடயங்களை பார்க்கும்போது நீங்கள் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்?

கொரோனா தடுப்பூசி செயற்திட்டத்தையும் அரசியலாக மாற்றியிருப்பது. 25 மாவட்டங்களில் சரியாக தடுப்பூசி கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிற்கு மத்தியில்தான் கடந்தாண்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களையும் நடத்தினார்கள்.

தற்போது அனைத்து மதுபானக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. அடுத்தாக உருவாகுவது சாரயக் கொத்தணிதான். ஜனாதிபதிக்கு மக்கள் வாக்களித்து முறைமை மாற்றத்திற்கு எனவே இனியாவது முறைமைகளை மாற்றம் செய்யுங்கள்.

எவ்வாறான இலங்கையை எதிர்பார்க்கின்றீர்?

நிறைவேற்றதிகாரத்தை நீக்கிய அரசியல் முறை மாறிய சமூகமொன்றை, ஆனால் நாடுள்ள நிலமை தொடர்ந்தால் எனக்கும் பிள்ளைகள் இருப்பதால் நாட்டில் இருப்பேனா என்பது தெரியாது. LNN Staff

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: