2024 ஒலிம்பிக்கை இலக்குவைக்கும் மாணவி சாகிர் ஹுஸைன் பஹ்மா

நேர்­காணல் : எம்.எம்.எம். ரம்ஸீன்

நமது சமூ­கத்தில் மாண­விகள் பலர் அண்மைக் கால­மாக பல்­வேறு துறை­களில் தமது திற­மைகள் மற்றும் ஆளு­மை­களை வெளிப்­ப­டுத்தி வரு­வதைக் காண முடி­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்தில் பெண்­களின் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு பெண்கள் ஆணா­திக்­கத்­திற்­குட்­ப­டு­வ­தாக சிலர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரும் சூழ்­நி­லையில், இம்­மா­ண­வி­களின் திற­மைகள் வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­வ­த­னூ­டாக அந்த மனப்­ப­திவில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முடியும்.

தென்­னி­லங்­கையில் சிங்­கள மொழியில் தேர்ச்சி பெற்ற சுக்ரா முனவ்வர் தனது மொழி­யாற்றல், அறிவு, திறமை மூலம் சில மாதங்­க­ளுக்கு முன்பு முஸ்லிம் சமூ­கத்தை நோக்கி பெரும்­பான்மை சமூ­கத்தின் கவ­னத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து பல மாண­விகள் தேசிய மட்ட பரீட்­சை­களில் சாத­னை­களை படைத்து நாட்­டுக்கும் சமூ­கத்­திற்கும் பெருமை தேடித் தந்­தனர்.

இவ்­வ­ரி­சை­யில்தான் தற்­போது மலை­யத்தில் கம்­ப­ளையை பிறப்­பி­ட­மாகக் கம்­பளை சாஹிரா கல்­லூ­ரியில் உயர்­தர பிரிவில் கற்கும் மாணவி சாகிர் ஹுஸைன் பஹ்மா Savate Kickboxing போட்­டியில் தேசிய மட்­டத்தில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். இலங்­கையின் சார்பில் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் பாகிஸ்­தானில் நடை­பெ­ற­வுள்ள Savate Kickboxing சர்­வ­தேச போட்­டியில் கலந்து கொள்­வ­தற்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள இலங்கைக் குழுவில் உள்ள ஒரே முஸ்லிம் மாணவி சாகிர் ஹுஸைன் பஹ்மா ஆவார். இவரைப் போன்ற இளந்­த­லை­மு­றை­யி­னரை இனங்­கண்டு வெளிச்­சத்­திற்கு கொண்டு வந்து ஊக்­கு­விப்­பதும் கைகொ­டுப்­பதும் சமூ­கத்தின் கட­மை­யாகும் என்ற அடிப்­ப­டையில், இவரை கம்­ப­ளையில் அவ­ரது வீட்டில் ‘விடி­வெள்­ளி’க்­காக சந்­தித்தோம்.

கேள்வி : நீங்கள் பங்­கு­பற்­ற­வுள்ள போட்டி தொடர்­பாக கூறு­வீர்­களா?

பதில் : விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கீழ் இயங்கும் French Savate Kick Boxing National Federation of Sri Lanka மூலம் தேசிய மட்­டத்தில் நடாத்­தப்­பட்ட Savate Kickboxing தெரிவில் நான் தெரிவு செய்­யப்­பட்டு பாகிஸ்­தானில் நடை­பெ­ற­வுள்ள போட்­டிக்குத் தெரி­வா­கி­யுள்ளேன். விளை­யாட்­டுத்­து­றை­யுடன் தொடர்­பு­டைய Savate Kickboxing ஒரு தற்­காப்புக் கலை­யாகும். இது பிரான்ஸ் நாட்டில் பிர­பல்­ய­மா­னது. இதனை கல்வி நிலை­யங்­களில் பயிற்­று­விப்­பார்கள். இதில் பங்­கு­பற்றி சாத­னைகள் நிலை நாட்ட முடியும். இக்­க­லையை கற்றுக் கொள்ளும் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு தேசிய மட்­டத்தில் மட்­டு­மன்றி சர்­வ­தேச மட்­டத்­திலும் போட்­டி­களில் பங்­கு­பற்­றக்­கூ­டிய வாய்ப்­புள்­ளது. 2024 ஒலிம்­பிக்கை இலக்­காகக் கொண்டு தற்­போது பயிற்­சிகள் இடம்­பெ­று­கின்­றன.

கேள்வி : இச்­சர்­வ­தேச போட்­டிக்கு நீங்கள் தெரி­வா­கி­யதைத் தொடர்ந்து, உங்­களைப் பற்றி அறிந்து கொள்ள சமூ­கத்தில் பலரும் ஆர்வம் காட்­டு­கின்­றனர். உங்­களைப் பற்றி கூறு­வீர்­களா?

பதில் : கம்­பளை உனம்­புவ பகு­தியை சேர்ந்த எமது குடும்பம் மார்க்கப் பின்­ன­ணியைக் கொண்ட குடும்­ப­மாகும். எனது தந்தை அல்­குர்­ஆனை மன­ன­மிட்ட ஒரு ஹாபிஸ் ஆவார். அவர் பாத­ணிகள் தயா­ரிக்கும் தொழிலில் ஈடு­பட்டு வரு­பவர். அவர் தற்­காப்புக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்­ற­வ­ராவார். நான் குடும்­பத்தில் இரண்­டா­வது பிள்ளை. அவ்­வாறே, தந்­தையின் சகோ­த­ரர்­களும் சன்­மார்க்கப் பணி­களில் ஈடு­ப­டு­ப­வர்கள். எமது குடும்­பத்தில் 15 பேர் Savate Kickboxing, குங்பூ என்­ப­வற்றை முறை­யாகப் பயின்­றுள்­ளனர்.

கேள்வி : பொது­வாக இவ்­வா­றான பயிற்­சி­களில் நமது சமூக இளைஞர் யுவ­திகள் ஆர்வம் காட்­டாத நிலையில் உங்­க­ளுக்கு எப்­படி இதில் ஆர்வம் ஏற்­பட்­டது?

பதில் : எனது தந்தை Savate Kickboxing இல் தேசிய மட்ட முதல் தர பயிற்­று­விப்­பா­ளர்­களில் ஒரு­வ­ராவார். இதனால் பலர் அவரைத் தேடி வந்து பயிற்சி பெறுவர். இக்­க­லையின் நுணுக்­கங்­களை வீட்­டிற்கு வந்து கற்றுக் கொண்டு செல்­வார்கள்.

நான் சிறு வயதில் இருக்கும் போது அவர் கற்றுக் கொடுப்­ப­தையும் அவ­ரிடம் பலர் பயிற்சி எடுப்­ப­தையும் பார்த்துக் கொண்­டி­ருப்பேன். நாள­டைவில் இக்­க­லையின் நுணுக்­கங்கள் எனது மனதில் ஆழ­மாக பதிய ஆரம்­பித்­தது. அப்­போது, அவர்கள் பயிற்சி பெறு­வது போல் நானும் கைகளால் செய்து பார்ப்பேன். இது தொடர்­பான வீடி­யோக்­களை தேடிப் பார்ப்பேன். இதனால் எனது மனதில் நாள­டைவில் இக்­க­லையைக் கற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற அதீத ஆர்வம் ஏற்­பட்­டது. என­வேதான், எனது தந்­தை­யிடம் Savate Kickboxing ஐ முறை­யாகப் பயின்றேன். பின்பு, மேல­திக நுணுக்­கங்­களை எம்.டி.எம். நவ்சாத் சேரிடம் பெற்றுக் கொண்டேன். முன்னர் குறிப்­பிட்­டது போல் இதனை சுய ஆர்­வத்­தில்தான் கற்றுக் கொண்டேன். இதற்­காக நான் கடும் பயிற்சி செய்வேன். நான் பயிற்­சி­யி­லீ­டு­படும் போது Savate Kickboxing இல் தேசிய மட்­டத்­திலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் சாதனை படைக்க வேண்டும் என்றும் எமது சமூ­கத்தில் முன்­மா­தி­ரி­யாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

கேள்வி : ஒரு பெண் என்ற வகையில் Savate Kickboxing கற்றுக் கொள்­வது தற்­காப்­புக்கு உகந்­தது என்று கரு­து­கி­றீர்­களா?

பதில் : இதனை கற்­றுக்­கொண்ட பின்னர் எனக்கு தற்­போது நிறைய தைரியம், துணிச்சல் ஏற்­பட்­டுள்­ளது. அச்சம் இல்­லாமல் போயுள்­ளது. இக்­க­லை­யுடன் இணைந்த சுய­ஒ­ழுக்கம் எனக்குள் உரு­வா­கி­யுள்­ளதை உணர்­கின்றேன். மேலும், Savate Kickboxing கலையை கற்றுக் கொண்ட மன­நி­றைவு எனக்­குள்­ளது.

கேள்வி : நீங்கள் உயர்­தர வகுப்பு மாண­வி­யா­வீர்கள். இத்­தற்­காப்புக் கலையை நீங்கள் கற்றுக் கொள்­வதை உங்கள் வகுப்புத் தோழி­யர்கள் அறிந்திருந்­தார்­களா? அவர்­க­ளுக்கும் இதில் ஆர்வம் உள்­ளதா?

பதில் : நான் இதைப்­பற்றி அவர்­க­ளிடம் அதிகம் காட்டிக் கொண்­ட­தில்லை. ஆனால், சில சந்­தர்ப்­பங்­களில் அவர்­க­ளிடம் கூறிய ஞாபகம் உண்டு. அப்­போது “நாங்­களும் உனது தந்­தை­யிடம் வந்து Savate Kickboxing படிக்க வேண்டும்” என்று கூறு­வார்கள். எமது சமூ­கத்தில் பெண்­களும் இக்­க­லையை கற்­றி­ருக்க வேண்டும் என்­பதன் தேவையை எடுத்துக் கூறு­வார்கள். சில ஆசி­ரி­யர்­க­ளுக்கும் இது பற்றித் தெரியும். நான் தேசிய மட்­டத்தில் தெரி­வா­கிய போது கல்­லூரி அதிபர் உட்­பட ஆசி­ரி­யர்கள் என்னைப் பாராட்­டி­னார்கள். நான் இப்­போட்­டியில் பங்­கு­பற்றி தங்கப் பதக்கம் வென்று நாட்­டுக்கும் சமூ­கத்­திற்கும் எனது கல்­லூ­ரிக்கும் பெருமை தேடிக் கொடுப்பேன். இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல அல்­லாஹ்­த­ஆலா எனக்கு வெற்­றியைத் தருவான் என்ற நம்­பிக்­கை­யுண்டு.

கேள்வி : நீங்கள் இவ்­வா­றா­ன­தொரு துறையில் சாத­னை­களைப் படைப்­பது பற்றி சமூ­கத்தில் காணப்­படும் வர­வேற்பு எத்­த­கை­யது?

பதில் : நான் முன்னர் சொன்­னது போல் எல்­லோரும் தொடர்பு கொண்டு பாராட்டி வரு­கின்­றனர். இக்­க­லையை தாங்­களும் கற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற எண்­ணத்தை பலரும் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். எனது தந்தை வெளியில் பொது இடங்­க­ளுக்குச் செல்லும் போது பலர் அவ­ரிடம் என்னை வாழ்த்தி, பாராட்டிப் பேசி­யுள்­ளனர். French Savate Kick Boxing National Federation of Sri Lanka இன் தலை­வரும் பயிற்­று­விப்­பா­ள­ரு­மான பிரசாத் விக்­கி­ர­ம­சிங்க அவர்­களும் என்னை பெரிதும் ஊக்­கு­வித்து வரு­கின்றார்.

கேள்வி : இந்தக் கலையை முஸ்லிம் சமூ­கத்தில் ஏனைய பெண்­களும் கற்­றுக்­கொள்ள வேண்­டி­யதன் அவ­சியம் பற்றி என்ன கூற விரும்­பு­கி­றீர்கள்?

பதில் : நான் நினைக்­கிறேன். பெண்கள் யாவரும் கட்­டாயம் ஏதா­வது தற்­காப்­புக்­க­லையை கற்றுக் கொள்ள வேண்டும். இது எங்­க­ளு­டைய பாது­காப்­புக்கு மட்­டு­மன்றி உள்­ளத்­திற்கும் உடம்புக்கும் நல்­லது. சவால்­களை எதிர்­கொள்ள முடியும். சுறு­சு­றுப்பு, புத்­து­ணர்வு, மன தைரியம் ஏற்­ப­டு­வ­துடன் நோய்­களில் இருந்து பாது­காத்துக் கொள்ள முடியும். இதில் முஸ்லிம் சமூ­கத்தில் பெண்கள் மிகவும் பின்­தங்­கிய நிலையில் உள்­ளனர். எமது பெண் பிள்­ளைகள் 100 மீற்றர் தூரம் கூட ஓட முடி­யாத பல­வீன நிலையில் உள்­ளனர்.

எமது சமூ­கத்தில் கூடு­த­லான பெண்கள் நடைப்­ப­யிற்சி, உடற்­ப­யிற்சி இல்­லாமல் நீரி­ழிவு போன்ற நோய்­க­ளுக்­குட்­ப­டு­வதை அறி­கின்றோம். இதனால், பிற்­கா­லங்­களில் பணம் செலுத்தி வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் வெளி­யி­டங்­க­ளிலும் உடற்­ப­யிற்சி செய்கின்­றனர். இல்­லா­விட்டால் நோயின் கார­ண­மாக வாழ்நாள் பூரா­கவும் வாடு­கின்­றனர். எனவே, இத்தகைய ஒரு கலையை கற்று வைத்திருப்பது ஆரோக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: