தற்போதைய அரசாங்கம் மூன்று ட்ரில்லியன் கடன் பெற்றுள்ளது

நாம் நமக்குள் குலம், கோத்திரம், இனம், மதம் என்று பிரிந்து செயற்படாமல் ஏற்றத்தாழ்வுகள் இன்றி நமக்குள் பெயர் கூறி சுதந்திரமாக உரையாடும் நிலை உருவாக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மங்களா சமரவீர தெரிவித்தார்.

தெரன தொலைக்காட்சியின் 360 நேர்காணலில் உரையாடும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாம் சிங்கப்பூருக்கு முன்னாள் அன்று இருந்த நாடு. ஆனால் அன்று ஒதுக்கும்புற நாடாக இருந்த கொரியாவும் நம்மை முன்னேறிச் சென்றுவிட்டது.

நாம் நாடு என்ற அடிப்படையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் முதலில் நமக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும்.

மேலும் இந் நாட்டில் உருவாகிய பல அரசாங்கங்களில் பல முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றிருந்தேன். என்றாலும் இங்கு ஏற்பட்ட தவறுகளுக்கு காரணத்தை என் மீதோ அல்லது தற்போது  ஜனாதிபதி கோட்டாபய மீதோ குறிப்பிட முடியாது.

இங்கு ஏற்பட்ட தவறுகளுக்கு நான் உட்பட அரசு, எதிர்கட்சி, ஆளுங்கட்சி, வாக்களித்த பொதுமக்கள் அனைவரும் காரணமாகும். ஏனெனில் அனைவரும் சேர்ந்துதான் இந்நிலமையை உருவாக்கினார்கள்.

நமது நாட்டின் கடன்சுமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. மறுபுறம் எமது நாட்டு வருமானம் நாளுக்கு நாள் குறைவடைந்த வண்ணமுள்ளது. இதுதான் எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையாகும்.

இதற்கான காரணம் இந் நாட்டு அரசாங்களாகும். குறிப்பாக அதில் கோட்டாபய அரசுக்கு முக்கிய பங்கு உள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்ந்தன அன்று நாம் ஐந்து ட்ரில்லியன் கடன் பெற்றதாக எம்மீது குற்றம்சாட்டினார். ஆனால் அதில் பெரும்பாலான கடன் 2009 – 2015 அரசாங்கத்தின் பிணை முறிகளை மீள் செலுத்துவதற்காகும். என்றாலும் நாம் முரகஹகந்த நீர்பாசன திட்டம், அதிவேகப்பாதை மாத்தறை – ஹம்பாந்தோட்டை செயற்திட்டம், மாத்தறை – கதிர்காம புகையிரதப் பாதை போன்ற செயற்திட்டங்களையும் மேற்கொண்டோம். ஆனால் கடந்த சில மாதங்களுக்குள் தற்போதைய அரசாங்கம் 3 ட்ரில்லியன் கடன் பெற்றுள்ளது.

அது மாத்திரமன்றி, 16,200 கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2850 பில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு காரணம் கொரோனா தொற்று என்று கூறுகின்றனர். ஆனால் தொற்று நிலை காரணமாக மாத்திரம் இந் நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை. ஏனெனில் தொற்று நிலை ஏற்பட முன்னரே அரசாங்கம் திட்டமிடல்கள் இன்றி வரிகளை குறைத்தனர். இதனால் நாட்டின் வரி வருமானமும் குறைவடைந்தது.

எமது பொருளாதார திட்டத்திலும் பல குறைபாடுகள் உள்ளன. நாம் நாட்டு வளங்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ததாகவும், தனியார்மயப்படுத்தலை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் இந்நாட்டிற்கு தனியார் மயப்படுத்தல் அவசியமாகும். ஏனெனில் பல அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன.

மேலும் வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்கு நாம் காணிகனள வழங்க வேண்டும். குறித்த காணிகளை நாம் வழங்கியதும் வெளிநாட்டவர் தமது செய்ய திட்டம் நிறைவடைந்ததும் தமது காணிகளை எடுத்துச் செல்வதில்லை.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: