அரசாங்கம் தோற்கவில்லை ஆனால் சில பின்னடைவுகள் உள்ளன – சிராஸ் யூனுஸ்

பிரமரின் முஸ்லிம் விவகார தேசிய இணைப்பாளரும்,  நிதி அமைச்சின் முகாமைத்துவம் மற்றும் நிறுவனங்களின் முகாமைத்துவ ஆளுனருமான தேசமானிய சிராஸ் யூனுஸ் அவர்களுடன் தனியார் ஊடகமொன்றுfக்கு மேற்கொண்ட நேர்காணல்.

இந்த அரசாங்கம் தோல்வி (பேல்) அடைந்துவிட்டதாக அனைவரும் கூறுகின்றனர். குறிப்பாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசு (பேல்) தோல்வியடைந்து விட்டதாக கூறுகின்றனர். அரசின் முக்கிய பதவியில் உள்ள நீங்கள் கூறுங்கள் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதா?

நான் இந்த அரசாங்கத்திற்காக தேர்தல் காலத்தில் மாத்திரம் பணியாற்றவில்லை. நாம் எதிர்கட்சியில் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பணியாற்றினேன். என்றாலும் தற்போது எமது அரசாங்கம் சில விடயங்களில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அதற்காக அரசாங்கம் பேல் (தோல்வி) என்று கூறமாட்டேன். என்றாலும் மக்கள், அவர்கள்  வெற்றியடைந்து விட்டதா? தோல்வியடைந்து விட்டதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தை சிலர் தமது அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்காக அமைத்திருக்கலாம். என்றாலும் நான் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்காகத்தான் இந்த அரசாங்கத்தை அமைக்க முயற்சித்தேன்.

என்றாலும்  பொருத்தமானவர்களுக்கு பொருத்தாமான பதவிகள் வழங்காதவை போன்ற சில பின்னடைவுகள் காணப்படுகின்றன. இது அரசாங்கத்தை மனபங்கப்படுத்துவதற்கு அல்ல. அரசாங்கத்திற்கு சரியான  தீர்மானம் எடுப்பதற்கு அவகாசம் காணப்படுகின்றது. இல்லாவிடின் எதிர்வரும் தேர்தலில் மக்கள் சரியாக பதில் அளித்து விடுவார்கள்.

அடுத்த விடயம், கொரோனா தொற்று மிக வேகமாக பரவுகின்றது. கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கை குறைந்த பட்சம் மூன்றுவாரம் அமுல்படுத்த வேண்டும். கொவிட் தடுப்பு பணிகளுக்கு இராணுவத்தை பயன்படுத்தினாலும் சுகாதராத் துறைக்கே தலைமைத்துவம் வழங்க வேண்டும். மேலும் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்றுங்கள்.

மூன்று வாரத்திற்கு ஊரடங்கை அமுல்படுத்தினால் அன்றாடம் உழைத்து வாழ்வோர் என்ன செய்வது என்று கேட்கலாம்.

அபிவிருத்திக்கு பல கோடி கடன் பெற்றுள்ள அரசாங்கத்திற்கு, மக்களின் மூன்று வார உணவிற்கு கடன் பெறுவது பெரிய விடயமல்ல .  வேலைசெய்கின்றவர்கள் உள்ள அரசாங்கமே இது.

நீங்கள் அன்று ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலின் போது, மஹிந்த பிரதமராவும், கோட்டாபய ஜனாதிபதியாகவும் உள்ள அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றீர். என்றாலும் இன்று நீங்கள் பேசும் விதம் வித்தியாசமாகவே உள்ளது. காரணம் என்ன?

நான் அன்று கூறிய நிலைப்பாட்டிலியே இன்றும் உள்ளேன். மக்கள் மஹிந்த ராஜபக்ஷ என்ற நபருக்காகவே வாக்களித்தனர். அவர் கூறியதற்காகவே மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தனர். இதுதான் உண்மை நிலவரமாகும்.

ஆனால் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எங்கு வைத்திருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ கூறும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? அவர் பேசும் பேச்சுக்கள் வௌியே வருகின்றதா என்ற பாரிய கேள்வி அனைவருக்கும் உள்ளது.

தகுதியானவர்களுக்கு தகுந்த பதவி வழங்கப்படுவதாக கூறிய அரசாங்கம் இன்று இல்லை. ஏனெனில் கம்பனிகளின் தலைவர்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் பதவி ராஜினாமா செய்கிறார்கள். செயலாற்ற முடியுமான தலைவர் என்றால் இவ்வாறு பதவி ராஜினாமா செய்வார்களா? தெரிவு செய்தவர்களைக் கொண்டு அவற்றை செய்ய முடியாது.  ஆனால் எனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியைக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றுகிறேன்.

மேலும் நான் இனவாதம், மதவாதம் பேசியதில்லை, சகவாழ்வு, அபிவிருத்தி தொடர்பாகவே தொடர்ந்தும் பேசுகிறேன்.

சிறுபான்மையைச் சேர்ந்த (ACMC, SLMC) கட்சிகள் நான் இவற்றை வைரஸ் கட்சி என்றே கூறுகிறேன். அவர்கள் ஜனாஸாவை எரிக்கிறார்கள், இனவாதிகள் என்று மக்களிடம் கூறி வாக்கை பெற்று அவர்களே இருபதற்கு கையும் உயர்த்தினார்கள். எங்கே எமது சமூகம் செல்கிறது. இதனை விட தமிழ் அரசியல் கட்சிகள் நல்லம்.

52 நாள் ஆட்சியில் அந்த இரண்டு டீலர்களில் ஒருவர் தம்பக்கம் வந்திருந்தால் இன்றுள்ள நிலைமைக்கு முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டிருக்கமாட்டாது.

மேலும் பொதுஜன பெரமுன சார்பாக மக்கள் பிரதிநிதியாக (தேசிய பட்டியல், கூட்டமைப்பு சாராத) தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாமை பாரிய குறைபாடாகும்.

முறைமையை (சிஸ்டம்) மாற்றத்தான் நாம் வந்துள்ளேன். முறைமையில் குறைபாடு காணப்பட்டால் அவற்றை கூறுவது எமது பொறுப்பாகும். ஏனெனில் தலைவர்களிடம் கேட்பதில்லை நம்மிடம்தான் கேட்கிறார்கள். நாம் கூறுவதை கட்சியும் செவிசாய்க்க வேண்டும்.

பிரதமர் முஸ்லிம்களின் விடயங்களில் கவனம் செலுத்துகின்றனர். அவர் கடந்த காலங்களில் பலஸ்தீன், காஷ்மீர் தொடர்பாகவும் பேசியுள்ளார். அவ்வாறே இந்து கோவில்களுக்கும் செல்கிறார். மத நல்லிணக்கம் உள்ள தலைவர்தான். என்றாலும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இந்த அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் அக்கரை செலுத்துவது குறைவு ஏன்?

மஹிந்த ராஜபக்ஷ மத நல்லிணக்கமுள்ள அனைத்து மதங்களையும் மதிக்கின்ற ஒருவர். அவருடைய பெயரில்தான் இந்த அரசாங்கமே உருவாகியுள்ளது.

ஆனால் அன்று சிலர் முஸ்லிம்கள் வேறு என்பதற்காக புர்கா, முகத்திரை அணிவதற்கும் எதிர்புக்காட்டினார்கள். ஆனால் இன்று அனைவரும் முகமூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் விதி. இறைவன் சுகாதாரம், பணம், பதவி என அனைத்தையும் வைத்து சோதிப்பான்.

ஆனால் மஹிந்த மதங்களில் அவ்வாறு வேறு தூராட்டம் காட்டும் ஒருவரல்ல. என்றாலும். அவருடைய கருத்துக்கள் எந்தளவு பின்பற்றப்படுகின்றது என்ற சந்தேகம் உள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை சுற்றி உள்ளவர்களே அன்றும் இன்றும் அவரை கஷ்டத்தில் போட்டனர்.

மேலும் முஸ்லிம்களுக்கு குறைவான இடமே வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம், தமிழ் சமூகத்தின் பொருத்தமான மக்கள் பிரதிநிதிகள் பொதுஜன பெரமுனவில் இல்லை. தற்போது அரசாங்கத்தில் உள்ள சிறுபான்மை உறுப்பினர்கள் கூட்டமைப்பு அல்லது தேசிய பட்டியல் மூலம் வந்தவர்களாகும். பொதுஜன பெரமுன ஊடாக மாத்திரம் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக தெரிவான ஒருவரும் இல்லை.

நாம் மக்கள் பிரதிநிதியைத்தான் கேட்டேன் எமக்கு வழங்கப்பட்டதா? குறைபாடுகள் இருந்தால் குறிப்பிட வேண்டும். மேலும் நான் ரிஷாதும் அல்ல ஹக்கீமும் அல்ல முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்து அரசியல் செய்வதற்கு. நான் அரசியலுக்கு வந்தது சமூக சேவை​யை பரவலாக செய்வதற்கு. பணம் சம்பாதிப்பதற்கு வரவில்லை.

எனக்கு வேட்புமனு பொதுஜன பெரமுன மூலம் வழங்கப்படுமோ தெரியவில்லை. அவ்வாறு வழங்கினாலும் முஸ்லிம் சமூகம் வாக்களிப்பார்களா என்ற சந்தேகமும் காணப்படுகிறது. தற்போது தேசிய பட்டியல் மூலம் தெரிவானவர்களுக்கு தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பெறமுடியுமா?  மேலும் எனது கட்சி எனது மதம் அல்ல.

மூன்று தேரர்கள் முன்வந்து உமக்கு கிழக்கு மாகாண ஆளுனர் பதிவியை வழங்குமாறு கூறினார்களா?

இது உண்மையாகும். நான் அவர்களுக்கு எனது கௌரவத்தை செலுத்துகிறேன். வட கிழக்கு மாகாணத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு குறைவாகும். அவ்வாறான இடமொன்றில் போய் அலுவலகம் அமைத்து மஹிந்த ராஜபக்‌ஷவிற்காக வாக்குகளை சேகரித்து வழங்கியமைக்காக எனக்கு கிழக்கு மாகாண ஆளுனர் பதவியை வழங்குமாறு பிரதமரிடம் பரிந்து பேசினார்கள். என்றாலும் மகாநாயக்க தேரர்கள் கூறியதற்காவது அவ்வாறு  அவர்களால் வழங்கப்படவில்லை.

இன்றுள்ள முஸ்லிம் கட்சி உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டாலும் நாம் தோல்வியடைந்த காலத்தில் எம்முடன் இருக்கமாட்டார்கள் வெற்றி பெற்ற கட்சியுடன் சேர்ந்து விடுவார்கள்.

அவ்வாறே பொதுஜன பெரமுனவும் குறைந்தது கொழும்பு மாநகரசபைக்காவது முஸ்லிம் உறுப்பினர்களை அனுப்ப முயற்சிக்கவில்லை. இதனை பஸில் ராஜபக்ஷவும் ஏற்றுக் கொண்டார். அன்று எனது பெயரை மஹிற்த ராஜபக்ஷ பிரேரித்தும் வழங்கப்படவில்லை. ஆனால் எனக்காக கேட்கவில்லை. அங்கு தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களுக்கும் வழங்கப்படவில்லை. எனவே கட்சியும் அரசாங்கமும் தூரநோக்கோடு செயற்பட வேண்டும். LNN Staff

 

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: