இலங்கையின் பொருளாதார அவசர காலச் சட்டம் குறித்து சுமந்திரன் அல் ஜெஸிராவுக்கு வழங்கிய நேர்காணல்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே, இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால நிலைமை அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, விசேட அறிவிப்பொன்றின் ஊடாக, சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் சுகாதார நிலைiமையை அடிப்படையாகக் கொண்ட, சட்டமொன்று நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, சுகாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்ட, சட்டம் உருவாக்குவதற்கான தனிநபர் பிரேரணையொன்றை தான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவம் அவர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை எதிர்வரும்  06ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: