ரஞ்சனின் விடுதலை தாமதமடையக் காரணம் என்ன?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைக்கைதிகள் தினத்தில் விடுதலையடைவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இன்னும் விடுதலையாகவில்லை.

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டில், கைதாகியுள்ள ரஞ்சனுக்கு விடுதலை வழங்க வேண்டுமெனின் நீதித்துறையிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என ஜனாதிபதி தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிபந்தனையை ஏற்பதா? இல்லையா? என்பது ரஞ்சன் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.

அவ்வாறு ஏற்றுக் கொண்டால் மேலும் பல சிக்கல்களை எதிர் நோக்கலாம் என்று அஞ்சுகிறார்.

எனவே இது குறித்து ரஞ்சன் தனது சட்டத்தரணிகளுடன் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.

ரஞ்சனின் தீர்மானமே அவரது விடுதலையை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: