சந்தனமடு ஆற்றில் சட்ட விரோத மணல் அகழ்வு செய்தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சாணக்கியன்

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சித்தாண்டி கிராமத்தில் சந்தனமடு ஆற்றில் சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,

குறித்த சட்டவிரோத மண் அகழ்வு 100,000 கிலோமீட்டர் பாதை அமைப்பு திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்திரகாந்ததனுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு கிலோ மீட்டர் பாதை அமைப்பதற்காகவே இவ்வாறு மண் அகழப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இவ்வாறு குறித்த செயற்திட்டத்திற்கு சட்டவிரோதமாக மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று ராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

மேலும் இவ்வாறு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

மாலைதீவுக்கு மணல் ஏற்றுமதி செய்வது தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் உரையாடியமையினால் ஒரு கியொப் 180,000 ரூபா வீதம் ஏற்றுமதி செய்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவை தொடர்பாக சட்ட நடவிக்கைகள் எடுக்காமல் குறித்த அமைச்சர்கள் இராஜினாமாக செய்வதாக கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இராஜினாமா செய்யாமல் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையே எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தபோது, பொலிஸார் மணல் அகழ்வு இடம்பெறும்போது மாத்திரமே கைது செய்யலாம் என்று பொடுபோக்காக செயற்படுவதாக குறிப்பிட்டு இது தொடர்அமைச்சர் சரத் வீரசேகர கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

குறித்த பிரதேசத்தில் மணல் அகழப்பட்டால் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் மண் அகழ தடை செய்துள்ளதாக சாணக்கியன் தெரிவித்தார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் மணல் அகழ்வு மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: