புதிய பாதுகாப்பு உடன்படிக்கையில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன்

அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தமக்கிடையிலான புதிய பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து அறிவித்துள்ளன.

இந்த உடன்படிக்கையின்படி, அவுஸ்திரேலியா முதல் தடவையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும் கொண்டிருக்கும்.

சீனாவை சமாளிப்பதற்காக இந்த உடன்படிக்கைக்கு செய்துகொள்ளப்படுவதாக கருதப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் ஆகியோர் புதன்கிழமை நடத்திய இணையவழி ஊடகவியலாளர் மாநட்டின்போது  இந்த புதிய ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்பட்டது.

சீனாவின் பெயரை இத்தலைவர்கள் குறிப்பிடாத போதிலும், பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு இது உதவும் என  பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் பொறுப்பற்ற நடவடிக்கை என சீன கண்டனம் தெரிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் ஸாவோ லிஜியான் இது கறித்து கூறுகையில்,  ‘இப்பிராந்தியத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் இந்த உடன்படிக்கை பாரதூரமாக பலவீனப்படுத்துவதுடன் ஆயுதப் போட்டியை தீவிரப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனிலுள்ள அமெரிக்காவுக்கான சீனத் தூதரகம், இந்த பனிப்போர் கால மனநிலை என விமர்சித்துள்ளது.

அவுஸ்திரேலியா  முதுகில் குத்துகிறது – பிரான்ஸ்

இதேவேளை, பிரான்ஸிடமிருந்து நீர்மூழ்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா ரத்துச் செய்துவிட்டு, அமெரிக்காவிடமிருந்து நீர்மூழ்கிகளை வாங்கவுள்ளமை குறித்து பிரான்ஸ் கவலை தெரிவித்துள்ளது.

பிரான்ஸிடமிருந்து மரபுவழி சக்தியில் இயங்கும் 12 நீர்மூழ்கிகளை வாங்குதற்கு  2016 ஆம் ஆண்டில் அவுஜஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. அப்போது இதன் பெறுமதி 50 பில்லியன் அவுஸ்திரேலிய டொலராக இருந்தது. தற்போது இதற்கு பதிலாக அமெரிக்காவிடமிருந்து அணுசக்தி நீர்மூழ்கிகளை வாங்குவதற்கு அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.

இத்தீர்மானமானது முதுகில் குத்தும் நடவடிக்கை என பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர்  விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: