2 வருடங்களில் இலங்கையை எவ்வாறு வளர்ந்த நாடாக மாற்றுவது? ரணில்

மிகவும் வலுவான தேசிய கொள்கையொன்றை உருவாக்கினால் இரண்டு வருடங்களுக்குள் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியுமென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முறையான கொள்கையொன்றை வகுத்து செயற்பட்டால் 20 வருடங்களுக்குள் நாட்டின் தனிநபர் வருமானம் நான்கு மடங்காக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சீனா உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகள் அனைத்துமே மாற்றமில்லாத தேசியக் கொள்கைகளின் ஊடாகவே இவ்வாறு உயர்ந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் 115ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ஒன்லைன் ஊடாக இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: