பால்மா அரசியல்

ப்ரியா ராமநாதன்

பால் மனிதனின் முதல் உணவு. குழந்தையாக கண்விழித்து முதலே பாலுக்கும் மனிதனுக்குமான பந்தம் தொடங்கிவிடுகிறது. குழந்தைகளின் முதல் உணவான தாய்ப்பால் தொடங்கி முதிர்ந்து இவ்வுலகைவிட்டு உயிர் பிரியும்போது கொடுக்கப்படும் கடைசித்துளி பால்வரை நாம் பாலுக்கும் பாற்பொருட்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் அளப்பரியது.

“பால்” என்கிற இந்த இரெண்டெழுத்து வெண்மைப்புரட்சி நவீன யுகமாற்றத்தில் வணிக புரட்சியாக மாற்றப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்குமுன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையின்போது பால் ரகங்கள், தரம் குறித்த சர்ச்சையில் பால் விவாதப் பொருளானமை நினைவிருக்கிறதா?நம்மில் அநேகர் நினைத்திருக்கக்கூடும். பாலுக்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் என்ன சம்பந்தம்? காளைத்திருவிழா, ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு என எல்லாமும் கிராமப்பொருளாதாரத்தில் ஓர் அங்கம். அவை கால்நடைகளைக் கொண்டாடும் திருவிழாக்கள் . நம்மிடமிருந்து கால்நடைகளை பிரிக்கவேண்டுமென்றால் அதுதரும் கொண்டாட்டங்களை நம்மிடமிருந்து பிரிக்கவேண்டும்.

கால்நடைகளை வைத்திருப்பது வளர்ப்பது குறித்து நம்மிடம் எவ்வித பெருமிதமும் இருக்கக்கூடாது. அந்த பெருமித உணர்வு உடையும்போதுதான் அங்கு வணிகம் நுழைய முடியும். அதற்காகத்தான் ஜல்லிக்கட்டின் மீதான தடை என பலரும் பேசியது நினைவில் வருகிறதா?

இப்போது நம்நாட்டு நிலைமைக்கு வருவோம், இன்று நமக்கான பால்மா வகைகளுக்கு பெருத்த தட்டுப்பாடு நிலவும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் “பரவாயில்லை இனி நாம் பசுப்பாலுக்கு மாறுவோம் நல்லதுதானே” என கருத்திடுவதை பரவலாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆனால் இது எந்தளவு சாத்தியம்? இலங்கையின் பால் உற்பத்தி விகிதமானது மொத்த தேவையில் வெறும் 30 % மட்டுமே இன்று நம் நகரங்களில் கிடைக்கும் ஒரு லீற்றர் பாலின் விலை இருநூறு ரூபா. சேகரிப்பு மையங்களில் வெறும் எழுபது ரூபாவுக்கு வாங்கப்படும் பால், நுகர்வோரிடத்தே இருநூறு ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

இன்று நம் நாட்டு நிலைவரப்படி ஒரு பசு மாட்டின் விலை சுமார் இரண்டரை இலட்சம் முதல் நான்கரை இலட்சம் வரையில் எகிறிக்கொண்டிருக்கும் நிலையில் சாதாரண ஒரு விவசாயியோ அல்லது தொழிலாளியோ அதனை வாங்கி பால் வணிகம் செய்யும் அளவிற்கு சாத்தியப்படுமா உண்மையில் இலங்கையில் மாடு வளர்ப்புக்கான தேவை குறைக்கப்பட்டதன் பின்னர் அந்த கலாசாரமே அழிக்கப்பட்டுவிட்டது எனலாம்.

ஒருகால கட்டம் வரையில் பால் உற்பத்தி நம் நாட்டில் தேவையான அளவில் இருந்ததாகவும் பின்னாளில் மக்கள் பால்மா பவுடர்களை நுகர்வதில் அதிக ஆர்வம் காட்டவே உள்நாட்டில் இந்த மாடுவளர்க்கும் பாரம்பரியமும் தொழிலும் மெல்லமெல்ல அருகிவிட்டிருக்கின்றதெனலாம்.

ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் ஆட்சியின்பின் வந்த ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் திறந்த பொருளாதாரம் என்கிற பெயரில் தாராளமாக இறக்கப்பட்ட பொருட்களில் பால்மா பவுடர்களும் உள்ளடங்கின மலிவான விலையில் இலகுவாக நினைத்த நேரத்தில் கிடைக்கக்கூடியதாக இருந்த பால்பவுடர் இலங்கை மக்களின் தேநீர் தேவையினையும் பால் தேவையினையும் (எந்தவித எதிர்கால பின்விளைவுகளையும் சிந்திக்காமல்) தீர்த்துவைத்தது எனலாம்.

எவ்வித தடையுமின்றி இறக்குமதி செய்யப்பட்ட பாலும் பாற்பொருட்களும் விளம்பரங்கள் மிக அதிகமாக செய்யப்பட்டு மக்கள் மனதில் ஊடுருவிக்கொண்டன. (இலகுவில் கிடைக்கும் ஒன்றின்பால் ஈர்க்கப்படும் மனோநிலை கொண்டவர்கள் நம்மவர்கள் போலும்) பால் இன்டஸ்ட்ரி என்பது அதிக வருமானம் ஈட்டக்கூடியவொன்று என்கிறபோதிலும், இலங்கையைப் பொறுத்தவரையில் உள்நாட்டு உற்பத்தி.ஏனோ ஊக்குவிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும். அரசாங்கங்கள் எடுத்த தவறான முடிவுகளும் சில தனிமனிதர்களின் மற்றும் அரசியல்வாதிகளின் கமிஷன்களும் உள்ளூர் உற்பத்தியை முடக்கி வெளிநாட்டு இறக்குமதியை ஊக்குவித்தன என்று சொன்னாலும் தகும்.

கடந்த அரசாங்கத்தில் உள்ளூர் பால் உற்பத்தி தொடர்பான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு அதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு பின் பால் தொடர்பான எந்த உற்பத்தியை உள்நாட்டில் யார் தொடங்கினாலும் மிகக்குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது, மானியம் கொடுப்பது, ஆலோசனைகளை வழங்குவது போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்தத் திட்டங்கள் அடிமட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும்.

இப்படியொரு திட்டம் இருப்பதே அநேகருக்கு தெரிந்திருக்கவில்லை.

உண்மையில் இன்றைய நிலைவரப்படி பார்த்தால் இறக்குமதியை முற்றுமுழுதாக  ஒழித்துவிட்டு உள்ளூர் உற்பத்தியில் தங்கியிருப்போம் என முட்டாள்தனமாக பேஸ்புக்கில் வேண்டுமானால் ஸ்டேட்டஸ் போடலாம்.

ஆனால் உண்மைநிலைமை எங்களுடைய மார்க்கெட் டிமாண்டுக்கு ஏற்ற சப்ளை உள்ளூர் உற்பத்தியில் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதே.

எனவேதான் இலங்கை போன்ற நாட்டில் பால்மாக்களை திடீரென தடைசெய்தாலோ பதுக்கி வைத்து விலையை அதிகரித்து விற்றாலோ அது பொதுமக்களை பெரிய அளவில் பாதிப்படையச் செய்வதுடன் பேசுபொருளாகவும் மாறிவிடுகிறது.

நாம் நம் வாழ்வியலில் பல ஆண்டுகள் சற்று பின்னோக்கிப் போவோமாயின் ஊர்கள்தோறும் கிராமங்கள்தோறும் அநேகமாக அநேகரது வீட்டிலும் கால்நடை வளர்ப்பு என்பது சாதாரணமாக  இருந்தவொன்று.

எனக்குத் தெரிந்து கிராமங்களில் ஒரு குடும்பத்தின் பால் தேவையினை அவர்களது வீட்டில் இருக்கும் பசுவே தீர்த்துவிடும். அப்படியே பசுக்கள் இல்லாதவர்கள் அக்கம்பக்கத்தில் மாடு வளர்ப்போரிடம் பாலை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கெல்லாம் பவுடர் பாலின் அவசியம் அத்தியாவசியமாகவில்லை அப்போதெல்லாம். ஆனால் நிலைமை தற்போது தலைகீழ். நகரமயமாக்களில் விளைநிலங்கள் சுருங்கி கிராமப்புற பொருளாதாரம் என்பது தற்போது அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கின்றது. வேளாண்மைத் தொழிலை நம்பி வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளுக்கான உணவு தண்ணீர் பராமரிப்புச் செலவு என அனைத்துமே மெல்லமெல்ல கால்நடை வளர்ப்போருக்கு சவாலாக மாறத்தொடங்கி பல ஆண்டுகள்.ஆகிவிட்ட நிலை.

இலங்கை போன்ற பசுமை நிறைந்த நாட்டில் நாட்டு மாடு வளர்ப்பில் தாராளமாக ஈடுபடலாம் என நாம் நினைக்கக்கூடும். ஆனால் இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் யாரையும் அந்த தொழிலை நடத்தவிடாது என்பதே யதார்த்தம். இந்தியாவில்கூட சுமார் நூறுவகையான நாட்டு மாடுகளின் வகைகள் இருந்ததாகவும் பின்னாளில் அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து தற்போது ஜெஸ்ஸி இன கலப்பு வகைகளே காணப்படுகிறது.

வெண்மைப்புரட்சியின் பயனாக சுமார் நாற்பது ஆண்டுகளாக பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்குடன் வெளிநாட்டு மாடுகளின் இறக்குமதி அல்லது அவற்றின் கலப்பினங்கள் அங்கே ஏராளமாக உருவாக்கப்பட்டன.

நவீன பால் உற்பத்திக்காக நிறுவனங்கள் மாடுகள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் கற்பனைக்கும் எட்டாதவை. மாடுகளை மட்டும் அல்லாது கன்றுகளையும் சேர்த்தே அவை வதைக்கின்றன. கன்றுகள் தன் தாயிடம் மிகக்குறைந்த நேரமே பால் அருந்த அனுமதிக்கப்படுவதால் போதிய ஊட்டச்சத்தின்றி ஏராளமான கன்றுகள் இறப்பைநோக்கி தள்ளப்படுகின்றன.

அன்றாடம் நாம் குடிக்கும் பாலில் உள்ள வர்த்தக சதிகள் சொல்லில் அடங்காதவை செயற்கை கருவூட்டலால் காளைகளுக்கான அவசியம் குறைந்தது.

போதாக்குறைக்கு மாடறுப்புக்கு தடை தொடர்பான போராட்டங்கள் வேறு. இதனால் காளை வளர்ப்பு என்பது அருகியது. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டு அவையெல்லாம் கட்டிடங்களாக மாறின. மாட்டுத்தீவனங்கள்.இறக்குமதியாயின. ஒரு மாட்டிலிருந்து இரண்டு வீற்றம் பால் கறந்த நிலைமாறி இருபது லீற்றர் எதிர்பார்க்கப்பட்டது. ஐந்து முதல் எட்டு நிமிடங்களில் இரண்டு மஜர் பால் கறப்பதுதான் ஒரு மாட்டின் உயிரியல் கடிகாரத்தை குலைக்காமல் இருப்பதாகும். ஆனால் அதே கால அவகாசத்தில் இயந்திரம் வரையில் உறுஞ்சிகிறார்கள், persoane இரத்தமும் சேர்ந்தே வரும் என சொல்லப்படுவதோடு, அந்த சுரப்பு வேகத்தில் “lactaid ஹோர்மோனும் பாலோடு கலந்து வெளியேறி அதை அருந்தும் மனிதர்களுக்கு பின்னாளில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இன்று இந்தியாவைப் போன்றே இலங்கையிலும் நாட்டு மாடுகளின் வகையறாக்கள் குறைந்து Friesian, போன்ற வெளி மாடுகளின் ஆதிக்கமே அதிகளவில் தாக்கத்தினை செலுத்துகின்றன என்றால் மிகையில்லை. அழிந்தது நாட்டு மாடுகளின் இனமும் இதையொட்டியிருந்த காரியம் பொருளாதாரமும்தான். எளிய உணவாக இருந்த பால் சார்ந்த உணவுப் பால் மற்றும் பொருட்களும் சேர்ந்தே அழிக்கப்பட்டன எப்படி?

சிற்றூர்களில் முன்பே பெண்கள் பாலை தயிராக்கி கடைந்து வெண்ணெய், நெய் எடுத்து விற்கும் வழக்கம் இருந்தது. வெண்ணெய் எடுத்தபின் கிடைக்கும் துணைப்பொருளான மோரையும் விற்று வருமானம் ஈட்ட முடிந்தது. சிறந்த வெயில்கால பாணமாக விளங்கிய லாக்டிக் அமிலம் நிறைந்த நீர்மோர் மக்களுக்கு மலிவான விலையில் கிடைத்தது.

இதில் மிகச் சிறப்பானதென்னவென்றால் இப்பொருளாதாரம் பெண்களின் கையில் இருந்ததுதான், எளிய பெண்களிடமிருந்து இந்த சிறு வணிக பொருளாதாரம் இன்றோ தட்டிப்பறிக்கப்பட்டு பெரும் வணிக நிறுவனங்களின் வசம் சென்றுவிட்டதெனலாம். பால் என்பது இன்று அதுவொரு பங்குச் சந்தை வணிகம், பால்மா நிறுவனங்கள், சொக்கலேட் நிறுவனங்கள், ஐஸ்கிரீம் நிறுவனங்கள் என்பவற்றின் பங்குச்சந்தையில் எகிறிக்கொண்டிருக்க ஊர் சந்தையில் தயிர் விற்றுக்கொண்டிருந்த கிழவிகள் காணாமல் போயினர் என்றும் சொல்லலாம்.

முன்னாளில் பால் ஒரு முதன்மை உற்பத்தி வேளாண்மையின் ஓர் உபரி உற்பத்தி பொருளே இங்கு கால்நடைகள் உணவுப்பயிர்களில் மனிதர்கள் உண்டது போக உணவுக்குப் பயன்படாத மனிதரின் இவரங்களையும் தின்று வளர்ந்தவையே. மேற்கத்தைய கால்நடையை தமது கால்நடைகளுக்கு உணவு வழங்குவதற்கென்றே தனியான பயிர்செய்யவேண்டிய கட்டாயத்தைக் கொண்டது.

இன்று உலகில் பால் உற்பத்தி சுமார் ஐம்பது கோடி தொன்னுக்கு அதிகம் ஆனால் இதற்காக வளர்க்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை 22.2 கோடி சுமார் ஐம்பதுகோடி பால் என்பது சாத்தியமில்லை.

பால் அதிகம் சுரக்கவேண்டுமெனில் பசுக்கள் அதிகமான எண்ணிக்கையில் கன்றுகளை ஈனவேண்டும் இது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதால் செயற்கை கருவூட்டல் முறை நடைமுறைக்கு வந்தது. மேலதிகமான  பால் தேவைக்காக ஆக்சிடோஸ் ஊசி மாடுகளுக்கு ஏற்றப்பட்டது. பாலில் புரதச்சத்து, உடலுக்கு தேவையான கொழுப்பு, விட்டமின்கள், கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்புகள் நிறைந்துள்ளன.

குறிப்பாக Ae beta casein புரதம் நாட்டு மாடுகளின் பாலில் மட்டுமே உள்ளன. இது உடலுக்கு – தேவையான ஊட்டச் சத்துகளைக் கொடுத்து உடலை வலுப்படுத்துகிறது. மேலைநாட்டு மாடுகளில் இருந்து பெறப்படும் பால் பவுடர்களில் A2 beta casein புரதத்தோடு an எனும் வைரஸம் உள்ளது.

இந்த வைரஸ் உடனடியாக உடலைப் பாதிக்காது என்கிறபோதிலும் நாறிபட்ட அளவில் நீரிழிவு, இதய நோய்கள், ஆட்டிசம், நரம்புத் தளர்ச்சி போன்றவை ஏற்பட லாம் பெண்களைப் பொறுத்தமட்டில் பவுடர் பால் அருந்துவோரில் சிறுவயதிலேயே பூப்படைதல், மாதவிடாய் சுழற்சியில் சிக்கல், கர்ப்பிணி ஏற்படும் பாதிப்புகள் ஏற்படுகின்றனவாம்.

இந்தப் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க நம் நாட்டில் உற்பத்தியாகும் பிரேஷ் மில்க் வகைகளின் காலவாதி ஆறு   மாதங்கள் எனில், ஒரு நாளில் கெட்டுவிடும் பாலில் அப்படி எதைக் கலந்து இத்தனை மாதங்களுக்கு பதப்படுத்தி வணிகம் செய்கிறார்கள் என்பதைப்பற்றி என்றேனும் நாம் சிந்தித்ததுண்டா?

இந்தியா நாடுகளில் யூரியா, டிட்டாஜென் தூள், ஷாம்பு, வனஸ்பதி, போன்ற இரசாயனக் கலவைகளைக் கலந்து இரசாயனப்பால் தயாரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சைக்கு தக்க இவ்விடத்தே பால் என்பது இப்போது ஒரு ஆரோக்கிய பாணமல்ல என்பதால்தான் மருத்துவர்கள் சிலர் பால் அருந்துவதை ஊக்கப்படுத்துவதில்லை போலும்.

இப்போதெல்லாம் தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு தாய்ப்பாலின் மகிமை சொல்லும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகியதோடு தொடர்ந்தும் தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்களின் அழகு குறையும் என்கிற பொய்ப்பிரசாரம் உருப்பெற்றது. இதனால் ஒருகாலக் கட்டத்தின்பின் தாய்ப்பால் கொடுப்பதில் தொய்வு ஏற்படவே பால்பவுடர் வணிகம் தலைதூக்கியது.

குழந்தைகளுக்கான பால் மற்றும் பால் பொருட்களின் சந்தை மதிப்பு உலகளாவிய  ரீதியில் அதிகம் என்பதால்தான் இந்த சந்தையை குறிவைத்து மூன்றாம் உலக  நாடுகளில் இதுபோன்ற கட்டுக்கதைகள் வலிந்து பரப்பப்பட்டன போலும்.

உண்மையில் பால் என்பது இன்று இயற்கை பொருளாக இல்லை. அது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை பொருளாக மாற்றப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. ஆரோக்கிய பொருளாக இருந்த பால் இன்று அபாயகரமான பொருளாக மாறியிருக்கிறது. அதைத்தான் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள்வரை அனைவருமே அருந்துகின்றோம் . ஏனெனில் பால் என்பது வெறும் உணவு அல்ல அது மனித இனத்தின் உணர்வு . T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: