ராஜினாமா செய்யவுள்ள விமல், வாசு, கம்மன்வில

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நள்ளிரவில் கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படும் கெரவலப்பிட்டிய மின்சார உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வலுவான எதிர்க்கட்சியாக பணியாற்றிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மூன்று வலுவான நபர்களின் ராஜினாமாக்களை பிரதமர் பரிசீலித்து வருகிறார்.

பிரதமர் நாடு திரும்பியவுடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: