2 கோடி மக்கள் வறுமையில் வாட 157 கோடிக்கு ஆடம்பர மாளிகை வாங்கிய மந்திரி மகன்!

2 கோடிக்கும் அதிகமான மக்கள் தலிபான்களின் ஆட்சியில் வறுமையையும் அடுக்குமுறையையும் எதிர்கொண்டு வரும் வேளை, ஆப்கான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன் அமெரிக்காவில் ரூ.157 கோடிக்கு ஆடம்பர மாளிகை வாங்கிய தகவல் அமபலமாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது.

இதில் ஆப்–கான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் அண்மையில் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து, தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கினர்.

தலைநகர் காபூலை கைப்பற்றியதும் நாட்டு மக்களை பற்றி எந்த கவலையும் இன்றி அதிபர் அஷ்ரப் கனி மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக் கொண்டு தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி ஓடினார்.

அதோடு 4 கார்களில் எடுத்து வந்த பணத்தை ஹெலிகாப்டர் முழுவதும் நிரப்பிய பின்னரும் ஏராளமான பணம் மிஞ்சியிருந்தாகவும், அதை அவர் சாலையில் வீசி சென்றதாகவும் அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: