தொல்பொருள் அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச கண்காணிப்புடன் இடம்பெற வேண்டும் – சாணக்கியன்

தொல்பொருள் அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச கண்காணிப்புடன் இடம்பெற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாணக்கியன் நேற்று (13.10.2021) மட்டக்களப்பில் நோர்வே (Trine Jøranli Eskedal) மற்றும் நெதர்லாந்து (Tanja Gonggrijp) உயர்ஸ்தானிகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தை எதிர்காலத்தில் முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் அதன்போது மட்டக்களப்பில் நடைபெறும் காணி அபகரித்தல் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு பிரச்சினை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணமும் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஓர் விசேட கோரிக்கை ஒன்றை ராசமாணிக்கம் முன்மொழிந்தார்.

அக்கோரிக்கையானது குறித்த பிரதேசத்தில் தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப் படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.

இதன்மூலம் நாம் எதிர்கொள்ளும் சட்ட விரோத காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். LNN Staff

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: