அபிவிருத்தி என்பது கொங்கிரீட் காடுகள் அல்ல.
அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வோடு இணைய வேண்டும். – அனுர குமார

2004 இல் ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸில் இடம்பெற்றதாக எனக்கு நினைவில் இருக்கிறது.
அதற்காக கிரீஸ் அரசாங்கம் பெரும் பெரும் கட்டிடங்களை எழுப்பினார்கள்.
பெரும் மைதானங்களை நிர்மாணித்தார்கள்.
உலகெங்கும் இருந்து வரும் வீரர்கள் தங்குவதற்காக பெரும் மாடி வீடுகளை அமைத்தார்கள்.

அப்போது அந்த காலத்தில் இருந்த கிரீஸ் நாட்டு எதிர்கட்சித்தலைவி, மக்களுக்கு உரையாற்றும் போது “உங்களுக்கு எப்போதாவது இந்த கொங்கிரீட்டுகளைத்தான் உண்ண வேண்டி வரும்” என்று குறிப்பிட்டார்.

2008 இல் என்ன நடந்தது?
கிரீஸ் உலகத்திலேயே வங்குரோத்தான அரசாக வீழ்ந்தது.
இன்று நீங்கள் கிரீஸுக்கு சென்றாலும் அங்கு அந்த பாதைகளை, கட்டிடங்களை பராமரிக்க முடியாமல் இருக்கின்றதைக் காணலாம்.
மத்திய வகுப்பு மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

அபிவிருத்தி என்பது கொங்கிரீட் காடுகள் அல்ல.
அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வோடு இணைய வேண்டும்.

நீங்கள் சென்று பாருங்கள், சூரியவெவ மைதானம் இருக்கும் பாதை 6 ஒழுங்கைகள் கொண்டது.
பேஸ்லைன் வீதியை விடவும் பெரியது.
அந்த பாதையை அண்மித்து வாழும் மக்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது.

பாடசாலை விட்டு வந்து பிள்ளைகள் விளாம்பழ பருவத்துக்கு பாதையோரம் விளாம்பழம் விற்கிறார்கள்.
எலுமிச்சை பருவத்துக்கு எலுமிச்சையும், தோடம் பழ பருவத்துக்கு தோடையும் பாதையோரம் விற்கிறார்கள்.

விசாலமான பாதை இருக்கிறது
ஆனால் பாடசாலை விட்டு வந்து பிள்ளைகள் மாங்காய், விளாங்காய் விற்கிறார்கள்.

இந்த விசாலமான பாதைக்கும் மக்களது வாழ்க்கைக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை.
மில்லியன் கணக்கான மக்கள் ஏழ்மையில் மூழ்கிப்போய் இருக்கிறார்கள்.

இந்த ஆட்சியாளர்கள் எப்போதும் அந்த ஏழ்மையை விற்கிறார்கள். நாம் இதை மாற்ற வேண்டாமா?

-அனுர குமார திஸாநாயக்க
(ஹரேந்திர ஜயலால் தொகுத்து வழங்கும் “நாடு யாருக்கு” நிகழ்ச்சியின் போது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: