நோர்வேவில் நடந்த பயங்கர சம்பவம்

நோர்வேவில் மர்ம நபர் ஒருவர் வில் மற்றும் அம்பால்களை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டதில் பலர் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் ஐரோப்பிய நாடான நோர்வேயின் Kongsberg நகரில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் வில் மற்றும் அம்புகளை உபயோகப்படுத்தி அப்பகுதி வழியே சென்றவர்களை திடீரென தாக்கியுள்ளார். இதில் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு சிறிது நிமிடங்கள் பதற்ற நிலை நிலவியது.

இந்த தாக்குதலில் இன்னும் பலர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணியளவில் Kongsberg நகரில் மக்கள் கூடியிருக்கும் மையப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலில் போது மக்கள் தாங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கும், இங்குமாக பதறியடித்து ஓடியுள்ளனர். மேலும் இத்தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரையில் தெரியவில்லை, இருப்பினும் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: