நாட்டின் ஜனாதிபதியை உருவாக்கிய கஜபா படையணிக்கு இன்று 38 வருட பூர்த்தி

இலங்கை இராணுவத்தின் பெருமைமிகு படையணிகளில் ஒன்றாக விளங்கும் கஜபா படையணியானது, தனது 38 வது வருட பூர்த்தியை 2021 ஒக்டோபர் 14 ஆம் திகதியான இன்று கொண்டாடுகின்றது. ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி வர்ணம் என்பவற்றைக் கொண்ட 38 வருட வரலாற்றையுடைய இந்தப் படையணியின் 38 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் அநுராதபுரம் சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் கொண்டாடப்படுகின்றன.

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியினால் போர்க்கள தளபதிகள் பலர் உருவாக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக சிறப்பான வழிக்காட்டல்களை வழங்கியுள்ளனர். போருக்குப் பின்னரான காலப் பகுதியிலும் நாட்டின் சகவாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான பல பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது மேற்படி படையானது 16 நிரந்தர அலகுகளையும் 8 தொண்டர் அலகுகளையும் கொண்டு ‘ஒற்றுமையே பலம்’ என்ற கொள்கையுடன் இயங்கி வருகின்றது.

இலங்கையின் ஆதிகால வரலாற்றில் யானை பலம் கொண்ட கஜபாகு மன்னனின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படையணியானது மிகவும் வலிமையான மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கக் கூடிய போர் வீரர்களை உருவாக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

படையணியின் ஸ்தாபகராகப் போற்றப்படும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களினால் அப்போது அவர் லெப்டினன்ற் கேர்ணலாக இருக்கையில் முன்மொழியப்பட்டு முதலாம் கஜபா படையணியானது 14 ஒக்டோபர் 1983 அன்று முதலாவது ரஜரட்ட ரைபிள் படையணி மற்றும் முதலாவது விஜயபாகு காலாட் படையணி ஆகியவற்றை ஒன்றிணைத்து நிறுவப்பட்டது. கஜபா படையணியின் சிறப்புமிக்க செயற்பாடுகள் அந்தப் படையணியின் போர் வீரர்களால் அடைந்து கொள்ளப்பட்ட அசாத்தியமான வெற்றி இலக்குகளுக்கு அடையாளமாக உள்ளது.

அந்த வகையில் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் தற்போதைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். அத்தோடு இரு பாதுகாப்பு செயலாளர்களையும், நாட்டின் ஜனாதிபதி ஒருவரையும் உருவாக்கிய பெருமையும் கஜபா படையணிக்கு உள்ளது. 18 ஓகஸ்ட் 2019 அன்று இலங்கை இராணுவத் தளபதியாக அவர் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து தைரியமான ஒரு தலைமைத்துவத்திற்கான முன்னுதாரணமாக செயற்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும். அதேபோல் இராணுவத் தளபதி இராணுவத்தில் இரண்டாம் லெப்டினன்ற் அதிகாரியாக பணியாற்றிய காலத்திலேயே ரண சூர பதக்கம் மற்றும் வீரவிபூசன பதக்கம், வீர விக்கிரம பதக்கம் என்பவற்றையும் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோல் நாட்டில் இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத போரின் போதான மனிதாபிமான நடவடிக்கைகளில் 48 இற்கும் மேற்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் கஜபா படையணியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் பலனாக கஜபா படையணியினரால் நிலையானதொரு சாதனைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி, திரிவித பலய, அங்குனு பஹர, ஜயசிக்குரு, சத்ஜய, ரிவிரெச உள்ளிட்ட நடவடிக்கைகள் கஜபா படையணியினரால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான சிறப்பு மிக்க கஜபா படையணியின் 175 அதிகாரிகள் 4075 சிப்பாய்கள் போர்க்களத்தில் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

அத்தோடு 180 அதிகாரிகளும் 4030 சிப்பாய்களும் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் 04 பரம வீர விபூஷண பதக்கங்கள், 03 வீரோதார விபூஷண பதக்கங்கள், 65 வீர விக்கிரம பதக்கங்கள், 774 ரண விக்கிரம பதக்கங்கள், 3919 ரண சூர பதக்கங்கள், 12 விசிஸ்ட விபூஷண பதக்கங்கள், 682 உத்தம சேவா பதக்கங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

16 ஜனவரி 2007 அன்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் கஜபா படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி வர்ணம் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியானது தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் என்பவற்றுடன் கூடிய இளம் துணிச்சலான தொழில்துறை வீரர்களைக் கொண்டு விளங்குவதோடு, இந்த காலாட் படை அமைதியான முறையில் இருக்கும் கம்பீரமிக்க ஒரு படையணியாகும். அத்தோடு தேசத்திற்கும் இராணுவத்திற்கும் தன்னலமின்றி கடமை உணர்வுடனான பொறுப்புக்களை நிறைவேற்றுவதிலும் கஜபா படையணி ஒருபோதும் பின்னிற்பதில்லை.

மேற்படி சிறப்புகளைக் கொண்ட கஜபா படையணியின் ஆண்டு நிறைவு விழாவின் பிரதம அதிதியாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நவரனே அவர்கள் கலந்து கொள்ள உள்ளமையும் சிறப்பம்சமாகும். TK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: