மோசடி வர்த்தகர் கைது

அரச இலச்சினையை தவறாகப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகடு அச்சிட்டு மோசடி செய்துவந்த வர்த்தகர், சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு – சிவநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறாக அடிக்கப்பட்ட இலச்சினைகள் அதற்குப் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் வாகன இலக்கத்தகடுகள் என்பனவற்றை சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: