டொலருக்காக மனசாட்சிக்கு விரோதமாக அரசியல் செய்ய முடியாது- விமல்

இராஜதுரை ஹஷான்

அரசியல் ரீதியில் தீர்மானமிக்க பயணத்தை நோக்கி பயணிக்கிறோம். டொலருக்காக  மனசாட்சிக்கு விரோதமாக அரசியல் செய்ய முடியாது.

ஆகவே ஒன்றிணைந்த சக்தியாக சிறந்த தீர்மானத்தை விரைவில் எடுப்போம் என கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மூல வளங்கள் முகாமைத்துவம் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (21.10.2021) இடம்பெற்ற ‘மூன்றாம் வழி’ மாத சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நெருக்கடியான சூழ்நிலையினை எதிர்க்கொண்டுள்ளோம்.கொவிட் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறான நிலையில் தான் மக்கள் வழமைக்கு மாறாக அதிகளவில் சமூக,மற்றும் அரசியல் நிலரவம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.தற்போதைய நிலை தீர்மானமிக்கதாக உள்ளது.

லிபியாவை சிறந்த முறையில்  நிர்வகித்த கடாபியை அந்நாட்டு மக்கள் வெறுக்கும் போது அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா அவரை கொன்றது.

இதன் பின்னர் லிபிய நாட்டு மக்கள் முன்னரை விட பெரும் நெருக்கடிக்குள்ளானார்கள்.இன்று லிபிய நாட்டு மக்கள் ஐரோப்பிய நாடுகளில் பல நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.

தவறான  தீர்மானத்தை தேடுகிறோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு மிகவும் தவறான தீர்மானங்களை உலக நாடுகள் எடுத்துள்ளன.

ஆகவே தற்போதைய நாட்டு மக்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசியல் ரீதியில் நாம் எடுத்த தீர்மானத்தை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உண்டு.

பொறுப்பில் இருந்து ஒருபோதும் மீள முடியாது. எடுத்த அரசியல் தீர்மானம் சரியானதா என்றும் பிறிதொரு தீர்மானம் தொடர்பில் சிந்திப்பவர்களை இலக்காகக் கொண்டு ‘மூன்றாம் வழி’ மாத சஞ்சிகையினை வெளியிடவுள்ளோம்.

நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். கொவிட் தாக்கத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறோம்.

தவறான தீர்மானங்களினால் ஏற்பட்டுள்ள சவால்களும் உள்ளன.இவற்றையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை பூகோளிய மட்டத்தில் உள்ள நாடு.முக்கிய தேசிய வளங்களை கொண்டுள்ளதால் உலக நாடுகளின் கவனத்தில் உள்ளது.

அரசியல் ரீதியில் தீர்மானமிக்க பயணத்தை நோக்கி செல்கிறோம். மனசாட்சிக்கு விரோதமாக அரசியல் செய்ய முடியாது. தீர்மானமிக்க வேளையில் சிறந்த தீர்மானத்தை எடுப்போம். டொலருக்கான மனசாட்சிக்கு எதிராக செயற்பட முடியாது.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: