மாகாண போக்குவரத்து தடை 31ஆம் திகதியுடன் தளர்வு!

மாகாணங்களுக்கிடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரயாணத் தடையை எதிர்வரும் 31ஆம் திகதி காலை 4.00 முதல் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளாா்.

சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த தளர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் அமுலில் இருந்த கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் 01ஆம் திகதி நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையே அமுலில் இருந்து வந்த உள்ள பயணக் கட்டுப்பாடுகள் நேற்று, ஒக்டோபர் 21 வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஒக்டோபர் 31 வரை நீடிக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

தற்போது நாட்டின் நிலைமையை அவதானித்து குறித்த பயணக்கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31, அதிகாலை 4.00 மணிக்கு நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: