சந்திரிகாவின் புதிய வீட்டில் இரகசிய சந்திப்பு – ஆட்சி கவிழ்க்க திட்டமா?

இன்னொரு அரசு ஆட்சி கவிழ்ப்புக்கு தயாராகிறதா என்ற கேள்வியை எழுப்பும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மலிக் சமரவிக்ரமவும் ஒரே சாப்பாட்டு மேசையில் சாப்பிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியும் கலந்துகொண்டமை விசேட நிகழ்வாகும்.

“மலிக்கின் வீட்டில் சந்திரிக்கா அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பேசுகிறார்” என்று சில சமூக ஊடகங்களில் இந்தச் சந்திப்பு தொடர்பான செய்தி வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், காலி தல்பேயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியின் வீட்டிற்கு அருகில் இந்த வீடு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. LNN Staff

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: