ட்விட்டரின் C.I.O ஆக இந்தியர் நியமனம்

உலகின் மிகப்பெரும் டெக் நிறுவனங்களின் சிஇஓ பட்டியலில் மேலும் ஒரு இந்தியர் ஆக ட்விட்டர் சிஇஓ பரக் அக்ரவல் இணைந்துள்ளார்.


ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆக ஜாக் டோர்சி பதவி விலகுவதாக அறிவித்தார். இதன் பின்னர் நேற்று புதிய சிஇஓ ஆக இந்தியாவைச் சேர்ந்த பரக் அக்ரவல் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆகப் பதவி ஏற்ற்க்கொண்டார். உலகின் மிகப்பெரும் டெக் நிறுவனங்களின் சிஇஓ-க்களுள் 37 வயதான பரக் அக்ரவால் ஒரு இளம் சிஇஓ ஆக இணைந்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க்-க்குக் கூட 37 வயது தான் ஆகிறது. பரக் அக்ரவால் பாம்பே ஐஐடி கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பை நிறைவு செய்தவர். இந்திய ஐஐடி-க்களில் இருந்து பல உயர்தர டெக் நிறுவனங்களுக்கு சிஇஓ-க்கள் கிடைத்துள்ளன. உதாரணமாக, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூட ஐஐடி காரக்பூர் கல்வி நிறுவனத்தில் படித்து முடித்தவர்.

மேலும், உலகின் பெரும் நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ், ஐபிஎம் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்களுக்கும் சிஇஓ-க்களாக இந்தியர்களே உள்ளனர். இந்திய திறமையாளர்களால் டெக் உலகுக்குப் பெரும் நன்மைகள் கிடைப்பதாக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் சிஇஓ எலான் மஸ்க் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் கூறுகையில், “இந்திய திறமையாளர்களால் அமெரிக்கா அதிகம் பயன் அடைகிறது” என ட்வீட் செய்துள்ளார். ஸ்ட்ரைப் நிறுவன சிஇஓ பேட்ரிக் காலின்சன் கூறுகையில், “கூகுள், மைக்ரோசாஃப்ட், பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ், ஐபிஎம், அடோப் மற்றும் தற்போது ட்விட்டர் ஆகிய நிறுவனங்களை நடத்தும் சிஇஓ-க்களும் இந்தியாவில் வளர்ந்தவர்களே. இந்தியர்களின் அருமையான வெற்றிகளை டெக் உலகில் காணும் போது சிறப்பாக இருக்கிறது. மேலும், புலம் பெயர்ந்தவர்களுக்கு அமெரிக்கா அளிக்கும் வாய்ப்புகள் குறித்தும் இந்த வெற்றிகள் நினைவு கொள்ளச் செய்கின்றன” என ட்வீட் செய்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: