பிரித்தானிய மாநில வெளிவிவகார அமைச்சருடன் கூட்டமைப்பு சந்திப்பு

பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் ராசமாணிக்கம், M.A. சுமந்திரன் அவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான தற்போதைய அரிசின் தாக்குதல்கள் மற்றும் இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசியலமைப்பு மற்றும் தற்போதைய சில சட்ட நடவடிக்கைகளை திருத்த வேண்டியதன் அவசியம் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பல விடயங்களும் நிரூபிக்கப்படு சுட்டிக்காட்டப்பட்டது.

எமது இவ் இராஜதந்திர விஜயமானது எமது மக்களின் பிரச்சனையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதும் எமக்கான உரிமையினை மிக விரைவில் பெறக்கூடிய வழிமுறைகளை ஒருங்கமைக்கும் நடவடிக்கை என்று ராசமாணிக்கம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: