இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடைகள் குறித்து பிரிட்டன் ஆராய்வு

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான விடயங்களில் பிரிட்டன், அமெரிக்கா உட்பட ஏனைய சகாக்களுடன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் சர்வதேச மனித உரிமை தடை களின்கீழ் வரக்கூடிய அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாத்தியமான தடைகள் குறித்தும் பிரிட்டன் அரசாங்கம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றது என தெரிவித்துள்ள அவர், எதிர்கால தடைகள் குறித்து பொதுவாக நாங்கள் ஊகங்களை வெளியிடுவதில்லை அவ்வாறு செய்வது அவற்றின் தாக்கத்தை குறைக்கும் என குறிப்பிட் டுள்ளார்.

அமெரிக்காவை பின்பற்றி இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தக்குற்ற தடைகளை விதிப்பதற்கு பிரிட்டனிற்கு மேலும் என்ன ஆதாரங்கள் வேண்டும் என தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மக்டொனாக் கேள்வி எழுப்பியவேளையே அமன்டா மில்லிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜெனீவாவில் இலங்கை தொடர்பான முதன்மைக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரிட்டன் மனித உரிமை ஆணையகத்தின் அடுத்த அமர்விற்கு முன்னதாக மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரிட்டன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: