மூன்று வழக்குகளிலிருந்து ஜோன்ஸ்டன் விடுதலை
லோரன்ஸ் செல்வநாயகம்
ச.தொ.ச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினாரென்ற குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மூன்று வழக்குகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்று காலை கொழும்பு பிரதான நீதவான் புத்திக ரகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோதே மேற்கண்ட தீர்ப்பு அறிவிக்கப்பட்டதுஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக பதவி வகித்த 2010 – – 2014 காலப்பகுதியில் ச.தொ.ச நிறுவனத்தின் ஊழியர்கள் 153 பேரை அவர்களது கடமையிலிருந்து விலக்கி அரசியல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தினாரென்றும் அதனால் அரசாங்கத்திற்கு 04 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் 03 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு மீதான விசாரணை நேற்றைய தினம் கொழும்பு பிரதம மஜிஸ்ட்ரேட் நீதவான் புத்திக சி ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவரை 03 வழக்கிலிருந்தும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.