பெப்ரவரி 10 இல் வரி சட்டமூல விவாதம்
சர்ச்சைக்குரிய விஷேட பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்திலிருந்து அரசாங்க நிதி மற்றும் வரிகளை நீக்கி அமைச்சர் ஒருவரை நியமிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் இறையாண்மைக்கு அப்பாற்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.