அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழு கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இப் பிரேரணையில் கையொப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கையெழுத்துகள் பெறப்பட்டதன் பின்னர் அதனை சபாநாயகருக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல் நடத்தப்படுமென ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு 113 என்ற பெரும்பான்மை இல்லை என்பதை வெளிப்படுத்துவதே தங்களது பிரதான நோக்கமாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: