ட்விட்டர் பயன்படுத்த கட்டணம் அறவிடுமா?

கடந்த மாத இறுதியில் உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்திருந்தார்.

இதையடுத்து, டுவிட்டர் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக மக்கள் மத்தியில் கருத்துக்கள் பரவியிருந்தன.

இது தொடர்பாக எலன் மஸ்க் நேற்றைய தினம் தனது பதிவு ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் குறிப்பிடும் போது, ”சாதாரண மக்களுக்கு ட்விட்டர் சேவை என்றும் இலவசமாக கிடைக்கும். அதேசமயம் அரசாங்க பாவனையாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு கட்டண முறை அறிமுகப் படுத்தப்படலாம்,” என கூறி உள்ளார்.

ஏற்கனவே டுவிட்டர் நிறுவனம், கூடுதல் வசதிகளுடன் ‘டுவிட்டர் ப்ளு’ என்ற கட்டணச் சேவையை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகளில் வழங்கி வருகிறது. இதை உலகம் முழுதும் விரிவுபடுத்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

பிரதானமாக ட்விட்டர் தளத்தை தமது வர்த்தக நடவடிக்கைகள் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: