வெளியேறவுள்ள மஹிந்த?

கடும் இராணுவ பாதுகாப்புடன் இன்று அதிகாலை அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

மேலும் அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய கொழும்பு மோதல்களில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி 229 பேர் காயம்.

மேலும் நேற்றிரவு ராஜபக்ஷ குடும்பத்தின் பூர்வீக கிரமாமன மெதமுல்லன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அத்துடன் அங்குள்ள ராஜபக்ஷவின் நினைவுத் தூபியும் ஆர்ப்பாட்ட காரர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் அரசு தரப்பைச் சேர்ந்த 30 மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் வீடுகள், ஹோட்டல்கள் ஆர்ப்பாட்ட காரர்களினால் தீக்கிரையாக்கியமை குறிப்பிடத்தக்கது. LNN

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: