தாக்குதல் அரச தரப்பின் சதியா?

நாடாளாவிய ரீதியில் 10.05.2022 வரை இடம்பெற்றுள்ள தாக்குதல்களில் 103 வீடுகள் உட்பட 08 மரணங்கள் பதிவாகியுள்ளன. (புள்ளிவிபரங்கள் மாறலாம்) இந்நிலையில் இவ்வாறு திங்கட்கிழமை இடம்பெற்ற தொடர் தாக்குதலுக்கான உடனடிக் காரணம் எதுவென்று அவதானித்தால் அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து பிரதமரின் ஆதரவாளர்கள் பிரதமருக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மைனா கோ கம மக்கள் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக அமைதியானதும் அறிவியல் ரீதியானதும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட கோட்டா கோ கம மக்கள் மீது பய்யோ அல்லது ஹட நவய லக்ஷா என்ற மஹிந்த ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதல்களாகும்.

குறித்த தாக்குதல் பகல் நேரத் தாக்குதலாக இருந்தமையால் குறித்த நேரத்தில் ஆர்ப்பாட்ட களத்தில் குறைந்தளவான மக்களே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் குடிபோதையில் மஹிந்த தரப்பினர் இருந்துள்ளமையால் எதிர்தரப்பினால் குறித்த கலகக்காரர்களை அடக்க முடிந்ததுடன் அவர்களை பேரவாவியில் நீராடச் செய்து அவர்கள் பயணித்த வாகனங்களையும் சேதத்திற்கு உட்படுத்தினர்.

எத்தரப்பாக இருந்தாலும் பொதுச் சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்கள் மீது சேதம் விளைவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஏதோ அரசின் ஊரடங்கு அறிவித்தல் கிடைத்தவுடன் மக்கள் ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கும் போது முதல் நாள் திங்கட்கிழமை இரவு 11 மணியை அடைவதற்கு முன்னர் நாடாளாவிய ரீதியில் 25 கு மேற்பட்ட அரச தரப்புக்கு ஆதரவான பிரபலங்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக அரசுக்கு எதிரான தரப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் ஒரு மாதமாக பொலிஸாரும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ள முடியாத வண்ணம் அமைதியான முறையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி முகத்திடலில் அமைதியாகவும் அறிவியல் ரீதியாகவும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட தரப்பு வெறும் 24 – 36 மணித்தியாலத்தில் 103 வீடுகளை தீ வைத்து எரிக்கும் நிலைக்கு மாறியது எவ்வாறு? அதற்குள் அவர்களுக்கு தீவிரவாத சிந்தனையை ஊட்டியது யார் என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும்.

நாட்டில் இடம்பெற்றுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலானவை சட்டதிட்டங்களை மீறும்போது கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டு அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தீ பரவலில் யாரும் சிக்கி காயத்திற்கு உள்ளாகவில்லை, சில வீடுகளில் வீட்டுப் பாவனை பொருட்களும் காணப்படவில்லை, அவ்வாறே தீ பரவும் விதம் மற்றும் அதன் வேகத்தை அவதானித்தால் அவை பெற்றோல் ஊற்றி எரித்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பொதுமக்கள் வாகனத்திற்கு பல மணித்தியாலம் காத்திருந்து பெற்றோல் எடுக்கும் காலத்தில், கலூன்களுக்கு பெற்றோல் வழங்காத காலத்தில் நாடாளாவிய ரீதியில் வீடுகளை எரிக்க பெற்றோல் பெற்றுக் கொள்ளப்பட்டது எவ்வாறு எங்கு என்பதையும் தேட வேண்டியுள்ளது.

அலுவலகங்களும் எரிக்கப்பட்டுள்ளன. தற்போது கோட்ட கோ கம பேராட்டத்தில் ஈடுபடுவோர் அரசியல்வாதிகளின் ஊழல், சட்டவிரோத சொத்து சேகரிப்புகள் தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகளை தொடரவுள்ள நிலையில் அவை தொடர்பான ஆவனங்களை அழிக்க ஆளுந்தரப்பே மேற்கொண்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் கடந்த காலத்திலும் போதியளவு சாட்சிகள், ஆவணங்கள் இன்மையால் பல வழக்குகள் த‌ள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்னதான் இருந்தாலும் கடந்த ஒரு மாத காலத்தில் பல சட்டத்தரணிகள் நடந்து கொண்ட விதம் திருப்தியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவே இது விடயத்திலும் ஆளுந்தரப்பின் சொத்துகள் அழிப்பு தொடர்பிலும் நீதமான தீர்ப்புகள் வெளியாகும் என நம்பிக்கையுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்திற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று அவதானித்தால் , கோட்டா கோ ஹோம் ஆர்ப்பாட்டமாகும்.

இலங்கையில் குறுகிய காலத்தில் அடிப்படை தேவைகளான எரிபொருள், மின்சாரம், மருந்துப் பொருட்களில் தொடர் இறக்குமதிகள் டொலர் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டமையால் மக்கள் எதிர் கொண்ட சிக்கல்கள் அரசுக்கு எதிராக அமைதியானதும்  அறிவியல் ரீதியானதுமான ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள தூண்டியமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று ரீதியாக அவதானிக்கையில் தொடர்ச்சியாக எழுபது ஆண்டுகளாக இனவாத பிரசாரம் மேற்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரிக்கும் ஆளும் மற்றும எதிர்தரப்புகளின் நடவடிக்கைகளே இன்று இவ்வாறு அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வரிசைகளில் நிற்க வேண்டிய நிலையை உருவாக்கியதை உணர்ந்து கொண்ட பொதுமக்களும் இளைஞர்களும் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டமே கோட்டா கோ ஹோம் ஆர்ப்பாட்டமாகும்.

Ibnuasad

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: