என் சொத்துக்களை அழித்தது பொதுமக்களோ தற்போதைய அரசுக்கு எதிராக போராடுபவர்களோ அல்ல – அலிசப்ரி

எனது இரத்த உறவுகளே உங்களுடன் பேசும் நான் அலி சப்ரி ரஹீம்.

கடந்த திங்கட் கிழமை எனக்கும் எனது வீடு மற்றும் மக்கள் சேவை மையமாக இருந்த எனது அரசியல் காரியாலயம் மற்றும் எனது வியாபார காரியாலயம் என்பன முற்றாக தீக்கிறையாக்கப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

மேற்படி தாக்குதலானது காலி முகத்திடலில் கட்டவிழ்க்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கோள்காட்டி நடந்தாக காட்ட முற்பட்ட போதும் இதன் உண்மைதன்மை அதுவல்ல என்பதை யாவரும் அறிவோம்.

பெரும்பாம்மையானோர் தங்களது அனுதாபங்களை உதவிகளையும் தந்திருந்தமை ஆறுதல் அளிக்கிறது.
இந்த நாசகார செயற்பாடுகளை கட்டவிழ்த்தவர்கள் பொதுமக்களோ அல்லது தற்போதைய அரசுக்கு எதிராக போராடுபவர்களோ அல்ல மாறாக என் மீது தனிப்பட்ட குரோதமுடையோரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலராலும், எதிர்காலத்தில் அரசியல் செய்ய காத்திருக்கும் வக்கிர ஈன புத்தியுடைய சிலராலும் வெளிநாடுகளில் இருந்தும் கூட பல வாரங்களாக திட்டமிடப்பட்டு அவர்களின் ஆதரவாளர்களால் நன்கு நெறிப்படுத்தப்பட்ட எதுவுமே அறியாத பல இளைஞர்களை பங்குபற்ற வைத்ததுடன் பழிகடாவாக இன்று ஆக்கியுள்ளார்கள்.

நான் கஷ்டப்பட்டு 45 வருட காலமாக உழைத்த எனது உழைப்பு அனைத்தும் அழிக்கப்பட்டு இன்று நான் நிரமூலமாக்ப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளேன். அக்கிரமக்காரர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து சாமர்த்தியமாக தப்பித்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டாலும் இறைவனின் பிடியில் இருந்து ஒரு போதும் தப்பிக்க முடியாது.

20ஆம் திருத்த சட்டமூலத்திற்கு வாக்களித்தது ராஜபக்ச அரசுடன் இனைந்தது மக்களின் பாதுகாப்பு, உரிமை, தேவைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தியாக்குவதற்கேயன்றி வேறில்லை. அத்துடன் அம்முடிவினை நான் தன்னிச்சையாக மேற்கொள்ளவும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
அது தான் நான் செய்த தவறு என்றால் அதற்கு எனது உடமைகளை நிர்மூலமாக்குவது எவ்வகையில் தீர்வாகும் இது நாம் பின்பற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முறனாதாகும். இன்னும் இதனை சரிகானுவோரும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை. அவர்களது சிந்தனை மாற்றத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என் வாழ்வில் பல்வேறு நட்டங்களை கண்டவன் நான் இதில் இருந்து மீண்டுவருவதற்குறிய சக்தியை இறைவன் எனக்கு முன்பு போல் என்றும் தருவான் என்பது எனது அனுபவப்பாடம். 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலிலே எனது சொந்த வட்டார்த்திலேயை தோல்வியின் போது நான் கற்ற பாடம் என்னை பாராளுமன்றம் வரை கொண்டு சென்று நிறுத்தியது.

2022 ஆம் ஆண்டு நான் கற்றபாடம் என்னை மென்மேலும் உயர்த்துமே அன்றி தாழ்த்தாது. எனக்கு ஏற்பட்ட நஷ்டமானது என்னை சார்ந்த எம் சமூகத்தின் நஷ்டமாகவே நான் காண்கிறேன்.

இன்று எமது நாடு எதிர்நோக்கியுள்ள அசாதாரன பொருளாதார நெருக்கடியும் அதன் கோரபிடியில் சிக்கியுள்ள மக்களுக்கான விமோசனத்து இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அதனை சரிவர நிறைவேற்ற ஆட்சியாளர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹூதால மனவலிமையையும் வழங்க வேண்டும்.

ஒரு பாராளுமன்ற எனக்கு ஏற்படும் தடங்கள்கள் தடைகள் ஒரு பொருட்டல்ல, எந்த அரசு ஆட்சி செய்கிறதோ எத்தடங்கள் வந்தாலும் அதனுடனே மக்களின் அபிவிருத்தி,உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை கட்டிக்காக்க ஒரு சிறுபான்மை மக்களின் ஏக பிரதிநிதியாக எனது பயணம் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

என்றும் உங்கள் அலி சப்ரி ரஹீம்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: