இந்தியாவின் உடனடி உதவி

இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம்  மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை  வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறித்த  யூரியா உரத் தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ்,  குறித்த உதவி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்   நடப்பு நெற்பயிர்ச்செய்கைக்கான மொத்த  உரத்தேவை  இதனூடாக பூர்த்தி செய்யப்படுவதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: