மே 18 இலங்கையில் LTTE தாக்குதல் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் LTTE அமைப்பினால் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் ஆராய்ந்து, உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2022 மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்த விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி, கடந்த மே 13 ஆம் திகதி இந்தியாவில் வெளியாகும் ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி தகவல் தொடர்பில் இலங்கை வினவிய போது, அவை பொதுவான தகவலாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய புலனாய்வுப் பிரிவினர், இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கும் அனைத்து தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, அந்தந்த பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்படும் அதேவேளை பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான உள்நாட்டு யுத்தத்தின் போதான இறுதி யுத்தத்தின்போது பல இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் மே 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: