நாடாளுமன்றத்திற்கு தீமூட்டிய போராட்டக்காரர்கள்

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி அதன் சில பகுதிகளுக்கு தீ மூட்டியுள்ளனர்.

தொடர் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது.

லிபிய மக்கள் டோப்ரூக் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் அவர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு அதன் ஒரு பகுதிக்கு தீ மூட்டியுள்ளனர்.

தற்போது லிபியா தலைநகர் திரிப்போலியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டங்களுக்கு லிபிய இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: