பதில் ஜனாதிபதியுடன் சர்வகட்சி அரசு – விரைவில் தேர்தல்

இன்று இடம்பெற்ற அனைத்து கட்சிகூட்டத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என தீர்மானிக்கப்பட்டமை குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலகவேண்டும் பதில் ஜனாதிபதியை நியமிப்பதற்காக ஏழு நாட்களிற்குள் நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என சபாநாயகர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமருடன் புதிய நிர்வாகத்iதை ஏற்படுத்த வேண்டும், குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பொதுத்தேர்தலிற்கு செல்லவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரதமரை பதில் ஜனாதிபதியாக நியமிப்பது பின்னர் புதிய பிரதமருடன் புதிய அரசாங்கத்தை அமைப்பது என்ற மாற்று யோசனையை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார் எனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ள சபாநாயகர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தானும் ஜனாதிபதியும் பதவி விலகுவது பின்னர் புதிய ஜனாதிபதி பிரதமரை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தை கூட்டுவது என்ற  இரண்டாவது யோசனையையும் முன்வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேவேளை சர்வ கட்சித் தலைவர்கள் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தாம் உடன்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருந்ததாக பிற்பகல் வேளையில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: