ரணிலுக்கே முடியவில்லை. மஹிந்த யாப்பா ஒரு மாதம் தாக்குப் பிடிப்பாரா?

வை எல் எஸ் ஹமீட்

சர்வதேச தொடர்புகளைக்கொண்ட, பொருளாதார நிபுணராக இல்லாதபோதும் பொருளாதாரம் தொடர்பாக நல்ல தெளிவைக்கொண்ட ஒருவராகக் கருதப்படுபவர்தான் ரணில். அவர் பிரதமரானதும் போராட்டம் கூட தற்காலிகமாக ஓர் சடைவு நிலைக்குமாறியது மக்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கையாகும்.

அப்படிப்பட்ட ரணிலுக்கே இன்றைய பொருளாதார நிலையை மாற்றுவது பாரிய சவாலாக இருக்கின்றது. அந்தளவு அதல பாதாளத்திற்கு பொருளாதாரம் கோட்டா ஆட்சியில் விழுந்திருந்தது. ஆனாலும் சில அடிப்படை ஏற்பாடுகள் நடக்கின்றன. குறிப்பாக IMF உடனான பேச்சுவார்த்தைகள் ரணில் பாரமெடுத்த பின்னரே முன்னெடுக்கப்பட்டன.

IMF உடனான பேச்சுவார்த்தை வெற்றியே நாட்டிற்கான எதிர்கால சர்வதேச உதவி, மற்றும் முதலீடுகளுக்கான அடிப்படையாக அமையப்போகின்றன.

கோட்டா ராஜினாமா செய்தால் ஆகக்கூடியது ஒரு மாத த்திற்கு ரணில் பதில் ஜனாதிபதியாக இருக்கப்போகிறார். (புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படாவிட்டால்) அந்தக் காலப்பகுதிக்குள் அவர் இதுவரை முன்னெடுத்த செயற்பாட்டைத் தொடரலாம்.

அதேநேரம், உதாரணமாக, சஜித் பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் ரணில் விட்ட இடத்தில் இருந்து அவரால் இலகுவாகத் தொடரமுடியும்.

அதைவிடுத்து, ரணில் ராஜினாமா செய்து சபாநாயகர் மஹிந்த யாப்பா பதில் ஜனாதிபதியானால் அந்த ஒரு மாதத்திற்குள்ளேயே நாட்டின் கதை முடிந்துபோகலாம். இந்த இக்கட்டான நிலையில் மஹிந்த யாப்பாவினால் ஒரு மாதத்திற்கு நாட்டைக்கொண்டுசெல்லமுடியுமா?

அரசியலுக்காக, ஏன் இவ்வளவு மடத்தனமான முடிவுக்குப்போய் இருக்கிறார்கள்? இதற்கிடையில் இன்னும் கோட்டா ராஜினாமா செய்யவில்லை. ராஜினாமா செய்தாலும் இன்னும் பெரும்பான்மையைக் கொண்டுள்ள SLPP மீண்டும் தனக்குள்ளிரிந்தே ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யுமா? என்றும் தெரியாது.

மட்டுமல்ல, ரணில் ஒரு தந்திரி. அவரையும் ராஜினாமாச் செய்யச்சொல்வதால் அவரே கோட்டாவிடம் பேசி ராஜினாமாவைத் தாமதப்படுத்தலாம்.

போதாக்குறைக்கு, ரணிலுடன் இருக்கும்போது ரணிலுக்காக கூத்தும்போடுவதும் சஜித்துடன் இருக்கும்போது சஜித்துக்காக கூத்துப்போடும் நம் சில தலைவர்கள் சமூகத்திற்காக ஒருபோதும் கூத்துப்போடத் தயாரில்லாத தலைவர்கள் இந்த விடயத்திலும் கடுமையாக கூத்துப்போடுவதாக கூறப்படுகிறது.

எனவே, மடத்தனம் பண்ணாதீ்ர்கள்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: