இலங்கை பிரச்சினை தீர வழி என்ன?

 1. அனைத்து இனங்களும் சமமாக கருதப்பட வேண்டும்.
 2. எந்த மதமும் அரசியலில் செல்வாக்கு செலுத்த கூடாது.
 3. அரசியலில் ஈடுபடுபவர்கள், இளைஞர்களாகவும், நல்ல கல்வி அறிவு உடையவர்களாகவும், பிரச்சனைகளை சமாளிக்க கூடியவர்களாகவும், சுயநலம் இல்லாதவர்களாக, பெரும்பாலான மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
 4. எந்த மட்டத்திலும் ஊழல் என்பது அறவே இருக்கக்கூடாது.
 5. அவர், அவர் தொழிலை மன திருப்தியுடனும், வாங்கும் சம்பளத்திற்கு நேர்மையாக மற்றவரின் தூண்டுதல் அல்லது அழுத்தம் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும்.
 6. அதிகாரம் மக்களால் அங்கிகரிப்பட்டதாகவும், வரையறை உள்ளதாகவும்
  இருக்க வேண்டும்.
 7. எந்த மாற்றமும், நிதி, நீதி நிர்வாக, சட்டம், ஒழுங்கு போன்ற அனைத்தும் பெரும்பாலான மக்களால் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படல் வேண்டும்.
 8. தேவைக்கு ஏற்றவாறு அதிகாரங்கள் கிராம மட்டம் வரையில் பகிரப்பட வேண்டும்.
 9. குற்றவாளி யாராக இருந்தாலும், நீதி, சட்டங்களுக்கு ஏற்றவாறு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும்.
 10. ஏற்கனவே உள்ள சகல தொழில்களையும் புனரமைப்பு செய்ய வேண்டும், சகல துறைகளிலும் தேவையான புதிய தொழில்களை உருவாக்கி, போதுமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
 11. தனியார் வியாபாரங்கள், சிறிய, பெரிய உற்பத்தி அமைப்புகள் அனைத்தும் சட்டப்படி பதிவு செய்யப்பட்டவையாக, வருட முடிவில் கணக்குகளை உரிய முறையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
 12. எல்லா விதமான தொழில்களும் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு அதற்கான நாளாந்த, வாராந்த அல்லது மாதாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும். இது ஒப்பந்தம், கூலி, குத்தகை, கடன் வட்டி போன்ற சகலவற்றிற்கும் பொருந்தும்.
 13. போக்குவரத்து சம்பந்தப்பட்ட வரையில் அரச, தனியார் போக்குவரத்துகள் வரையறை கொண்டதாக இருக்க வேண்டும். முக்கியமாக ஆட்டோ வாடகை வாகனங்கள் குறைக்கப்பட வேண்டும். அரச, தனியார் போக்குவரத்து கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
 14. அரச, தனியார் சம்பள கொடுப்பனவுகளில் கட்டாயம் அடிப்படை சம்பளம் என்று ஒன்று இருக்க வேண்டும். இந்த தொகையானது ஒரு குடும்பத்தின் வாழ்க்கை செலவிற்கு ஏற்றதாக அமைய வேண்டும். தொழிலற்றவர்களுக்கும் அடிப்படை சம்பளம் போதாதவர்களுக்கும் அரச உதவி தொகை குறிக்கப்பட்ட
  கிராமசபை மூலம் வழங்கப்பட வேண்டும்.
 15. அரச, தனியார் நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட இலாகாவில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கான சம்பளத்திலிருந்து. ஓய்வூதியம், தொழில் இழப்புக்கான காப்புறுதி போன்றன மாதா மாதம் கழிக்கப்பட்டு உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
 16. அனைத்து மக்களும் நம் நாடு, நாட்டின் வளர்ச்சியே நம் வளர்ச்சி என்பதை தாமாகவே உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
 17. நேர கட்டுப்பாட்டினை சகலரும் கடைப்பிடிக்க வேண்டும்.
 18. இரு மொழிக்கும் ஒரே அந்தஸ்து இருப்பதால் சகல பத்திரங்களும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிழை இல்லாமல் அச்சிட்டு வழங்கப்பட வேண்டும்.
 19. மக்கள் மீது விதிக்கப்படும் வரிகள் கட்டணங்கள் ஏற்புடையதாக இருக்க வேண்டும். மக்களும் தாம் செலுத்த வேண்டிய கட்டணங்களை உரிய முறையில் தாமதமின்றி செலுத்த வேண்டும்.
 20. தற்போது ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகியுள்ளதால் இந்த நடைமுறைகள் பின்பற்றபடுவதன் மூலம் நாடு ஓரளவிற்கு முன்னேற முடியும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி
Sinniah Kumar
Switzerland

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: