ஜனாதிபதியாக பதவியேற்கத் தயாராகிறார் ரணில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலில் இருந்து இராஜினாமாவை இன்று அறிவித்தால், இன்றிரவு பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார் ரணில்.

இந்த நிலைமையில் குழப்பங்கள் வரலாம் என்று கருதியே கொழும்பில் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.தேவைப்படின் இந்த ஊரடங்கு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படலாம்.

இதற்கிடையில் பிரதமராக டலஸ் ,சஜித் பிரேமதாச ,சம்பிக்க ரணவக்க , தினேஷ் குணவர்தன ஆகியோரில் ஒருவரை நியமிக்க இரகசிய பேச்சுக்கள் நடக்கின்றன. டலஸ் அழகப்பெரும காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பதவியேற்ற கையோடு அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தி , நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப்போவதாக ரணில் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்கள் சில மணி நேரங்களுக்கு முடக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: