இலங்கை அரசியலின் புதிய மற்றும் பழைய முகங்கள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரனதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான ‘நவ ஸ்ரீ லங்கா நிதாஹஸ் பக்ஷய’ என்ற புதிய அரசியல் கட்சியின் உறுப்பினராக விரைவில் இலங்கை அரசியலில் பிரவேசம் செய்யவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலன்னறுவை மேற்கு பிரதேசத்தின் பிரதான அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை நியமிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செப்டம்பர் 1ஆம் திகதி அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஏற்கனவே தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்வரும் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் நான்கு மகன்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.

பேருவளை ஹில்மி

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: