இலங்கைக்கான அபிவிருத்தி உதவி தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றம்

“இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு உதவுவதற்காக உத்தியோகபூர்வ வெளிநாட்டு உதவிகளை வழங்க திணைக்களம் திட்டமிட்டுள்ளதா” என இங்கிலாந்தின் ஜனநாயக தொழிற்சங்க கட்சியின் இணைத்தலைவர் ஜிம் ஷெனன், வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் விக்கி மோர்லியிடம் வினவிய போது பின்வருமாறு தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களின் ஊடாக ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கு ஆதரவை வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு பொருளாதார மற்றும் சுகாதாரத் துறை உதவிகளை வழங்குவதற்காக உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக மீளத் திரட்டியுள்ளது.

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களில் சுமார் 650,000 பேருக்கு உதவுவதற்காக பொருளாதார நெருக்கடிக்கு அவசர பதிலீடாக ஐ.நா. மத்திய அவசரகால பதிலளிப்பு நிதியம் (CERF) 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அறிவித்துள்ளது.

CERF க்கு மிகப் பெரிய ஒட்டுமொத்த நன்கொடையாளராக இங்கிலாந்து காணப்படுகிறது. இது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து $1.7 பில்லியனுக்கும் அதிகமான நிதிப் பங்களிப்பளித்து வருகிறது.

தெற்காசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவின் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் விம்பிள்டன் பிரபு தாரிக் அஹமட் ஜூலை 23 இல் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடனும் ஆகஸ்ட் 16ஆம் திகதி பிரதமர் குணவர்தனவுடனும் பேசியபோது, இலங்கைக்கு இங்கிலாந்தின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கை மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்கான எமது பிரதிபலிப்பை நாம் மீளாய்வு செய்து வருகிறோம்.” LNN Staff

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: