ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கை தொடர முடியாது

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான வழக்கில், அதன் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்கை முன்னெடுக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக, புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில், தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்குள்ள சலுகைகளின் அடிப்படையில், குறித்த வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: