சமகி ஜன பல வேகய – ஐக்கிய தேசிய கட்சி ஒன்றிணைய வேண்டும் – ஹரீன்

தற்போது அரசை தோல்வியடையச் செய்வதென்றால் சமகி ஜன பல வேகய, ஐக்கிய தேசியக் கட்சி  உட்பட  அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார்.

ஊடகவியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உங்கள் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதா?

நான் அறிந்தவகையில் அவ்வாறு பிரச்சினைகள்  இல்லை நான் இரு மாதங்கள் விடுமுறையில் இருந்தேன். அதனால் கட்சியின் உள்விவகாரம் பற்றி தெரியாது. ஆனால் நான் அறிந்த வகையில்  இல்லை.

அவ்வாறென்றால் கட்சித்தலைவரை விட்டு விட்டு கட்சிக் குழு கூட்டம் இடம்பெற்றது?

அது எனக்கு தெரியாது அதைச் ஏற்பாடு செய்தவரிடம் கேட்க வேண்டும். எனது தலைவர் சஜித் பிரேமதாஸதான். இவ்வாறு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கியவரை தேடிப் பார்க்க வேண்டும்.

சமகி ஜன பல வேகயவிலிருந்து ரணில் விக்ரசிங்ஹவின் பக்கம் ஒரு சாரர் செல்வார்கள் என்று பயம் உள்ளதா?

நான் நம்புவதில்லை. ரணில் விக்ரம சிங்ஹ அரசியல் ஆளுமையுள்ள ஒருவர். தற்போது அரசை தோல்வியடையச் செய்வதென்றால் சமகி ஜன பல வேகய, ஐக்கிய தேசியக் கட்சி  உட்பட  அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

சமகி ஜன பல வேகயயைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தேவையில்லை என்று நினைப்பதும், ஐக்கிய தேசியக் கட்சி சேர்ந்தவர்கள் சமகி ஜன பல வேகய தேவையில்லை என்று நினைப்பதும் என்று முட்டாள்தனம்.

தற்போது அரசு தோல்வியடைந்துள்ளது எனவே மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு ஒன்றிணைய வேண்டும்.

சிலர் எதிர் ரணில் விக்ரசிங்ஹவுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறதே?

அவ்வாறேல்லை. எனக்கு ரணில் விக்ரசிங்ஹ மீது மதிப்புள்ளது. அவருடைய காலத்தில் எனது அரசியல் வாழ்வில் அமைச்சரவை அமைச்சராக பணியாற்றியுள்ளேன்.

எனவே நான் இன்றும் அவருடன் தொடர்பில் உள்ளேன். அதற்காக அரசியலில் சஜித்திற்கு எதிராக செயற்படுவதில்லை.

உங்கள் கட்சியால் சதித்திட்டங்கள் இடம்பெறாதா?

சதி செய்வதாக இருந்தால் நான் தான். அவ்வாறு சதிகள் இடம்பெறாது. LNN Staff

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: